அறிமுக நாயகன் ஜேடி நடித்த ‘பயமறியா பிரம்மை’ படம் வெற்றி பெற்றதா? இல்லையா? – விமர்சனம் இதோ

0
213
- Advertisement -

இயக்குனர் ராகுல் கபாலியின் இயக்கத்தில் வெளியாயிருக்கும் படம் தான் ‘பயமறியா பிரம்மை’. இப்படத்தில் கதாநாயகனாக ஜேடி அறிமுகம் ஆகியுள்ளார். இவருடன் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடத்துனர். 69 எம் எம் ஃபிலிம்ஸ் இப் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இசையமைப்பாளர் ‘கே’ இசையமைக்க, நந்தா மற்றும் பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

-விளம்பரம்-

கதைகளம்:

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ், 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்திருக்கிறார். கொலை செய்வதையே கலையாக பார்க்கும் ஒரு நபர் ஜெகதீஷ். இவரின் வாழ்க்கை மற்றும் கொலைகளை பற்றி கேட்டறிந்து அதை புத்தகமாக வெளியிட எழுத்தாளர் வினோத் சாகர் இவரை சந்திக்க வருகிறார்.

- Advertisement -

ஜெகதீஷ் தான் கொலை செய்த அனுபவத்தையும், முதல் கொலையை எப்படி செய்தார் என்பதையும் விவரிக்கிறார். முதல் கொலையில் மட்டும் நிக்காமல் தொடர்ந்து கொலைகளை செய்கிறார் ஜெகதீஷ்.
இந்த கொலை மனப்பான்மை அவருக்கு எப்படி வருகிறது? இதனால் அவரின் குடும்பத்தின் நிலை என்ன? எழுத்தாளர் வினோத் சாகர், ஜெகதீஷின் வாழ்க்கையை எவ்வாறு புரிந்து கொள்கிறார்? என்பதுதான் படத்தின் கதை.

இயக்குனர் ராகுல் கபாலி, கொலையை கலையாக செய்யும் ஒரு குற்றவாளியின் வாழ்க்கையை மயமாக வைத்து இயக்கியுள்ளார். படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமான பாணியில் இருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல், இயக்குனர் கதையை இன்னும் தெளிவாக கூறியிருந்தால் திரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

-விளம்பரம்-

அறிமுக நாயகனான ஜேடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பு அறிமுக நாயகன் என்ற உணர்வு பார்ப்பவர்களுக்கு ஏற்படவில்லை. குரு சோமசுந்தரம் மற்றும் ஹரிஷ் உத்தமன் கொடுத்த வேலையை மிகவும் நன்றாக செய்துள்ளனர். படத்திற்கு பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது என்று சொல்லலாம். படத்தில் பெரும்பாலான காட்சிகள் இருட்டில் நடப்பதால் அதை தெளிவாக காட்சி அமைக்க தவறிவிட்டனர் என்று கூறலாம்.

நிறை:

அறிமுக நாயகன் ஜேடியின் நடிப்பு சிறப்பு.

பின்னணி இசை படத்திற்கு பலம்.

நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம் சிறப்பு.

குறை:

படத்தில் சில லாஜிக் குறைபாடுகள் உள்ளன.

நந்தாவின் ஒளிப்பதிவு தெளிவில்லை.

சில காட்சிகளில் கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பது புரியவில்லை.

மொத்தத்தில் ‘பயமறியா பிரம்மை’ – சோர்வு

Advertisement