நானே ஒரு பயில்வான் என்ன போய் ராதிகா யார்னா அடிக்க முடியுமா ? சவால்விட்ட பயில்வான் ரங்கநாதன்.

0
612
Bayilwan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

பயில்வானும் சர்ச்சை பேச்சுகளும் :

மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான்.

- Advertisement -

நடிகைகள் குறித்து ஆபாச கருத்துக்கள் :

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகைகளுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார்.

ராதிகா குறித்து பேசியதால் எழுந்த சர்ச்சை ;

இதனால் இவருடைய வீடியோக்களுக்கு பல லட்சம் வியூவர்ஸ் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.சமீபத்தில் இவர் நடிகை ராதிகாவையும் அவருடைய தாயாரையும் பற்றி அவதூறாக பேசி இருந்த வீடியோவை யூட்யூப் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

நடு ரோட்டில் சண்டையிட்ட ராதிகா :

இந்த நிலையில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ராதிகா அவரை வழிமறித்து தன் தாயை பற்றி எப்படி அவதூறாக பேசி இருக்கிறாய்? என தகாத வார்த்தைகளால் சண்டை போட்டதாகவும் அவரை அடித்தாகவும் செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், நானே பயில்வான் என்ன யார்னா அடிக்க முடியுமா?

பயில்வான் விளக்கம் :

ராதிகா என்னை திட்டினார் நானும் அவரை பதிலுக்கு திட்டினேன். அவ்வளவு தான் நடந்தத. நானே பயில்வான், நான் தூத்துக்குடிக்காரன், அங்கு என்ன பேமஸ் அருவா, நான் அந்த திமிரை உடையவன் என்று கூறி உள்ளார். மேலும், தன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள திவ்யா யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர்களை யார் தூண்டி விடுகிறார் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement