நயன்தாராவை மோசமாக விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சமீபத்தில் நயன் நடித்த படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார்.
இதனை அடுத்து நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி.இந்த படமும் சுமாராக ஓடி வருகிறது. இந்த நிலையில் நயன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில்,இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருடைய வளர்ச்சி இமயமலை அளவிற்கு உயர்ந்தது. படங்களின் மூலம் அவர் நன்றாக காசை சம்பாதித்தார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கவும் ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் இவர் தோல்விகளையும் சந்தித்தார். அதில் இவர் சிம்புவை காதலித்து கல்யாணம் வரை சென்று தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அதில் அதிருப்தி அடைந்த பிரபுதேவாவின் முதல் மனைவி நயன்தாராவை வீட்டிற்கு தேடி வந்து பயங்கரமாக திட்டி, தாக்கினார். நயனின் உறவில் இருந்தாலும் பிரபுதேவா அவரது குழந்தைகளை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து நயன்தாரா அங்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்த பிரபுதேவாவோ அதற்கு எதிர் மாறாக நின்றார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் நயன்தாரா சிம்புவை காதலித்தார். அந்த காதல் முறிந்து போக பின்னர் பிரபுதேவா மீது காதலில் விழுந்தார். அதிலும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்துவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தது தான் பிரச்சனை . சில ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்த இவர்கள் காதல் இடையே விரிசல் ஏற்பட்டு நாளடைவில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
பொதுவாகவே நயன்தாரா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை குறித்து எந்த ஒரு வதந்திகள் வந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட பிரபுதேவாவின் முதல் மனைவி ராம்லதா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தா. அதில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது.
நயன்தாராவால் தான் என்னுடைய பதினைந்து வருட சந்தோஷமான திருமண வாழ்க்கை முடிவடைந்தது. நான் நயன்தாராவை என்றென்றும் மன்னிக்க மாட்டேன். இந்த மாதிரி பெண்களெல்லாம் கைது செய்ய சொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபுதேவாவும் இரண்டாம் திருணம் செய்து அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், ராம்லதா என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.