‘உங்களுக்கு என்னை பிடிக்காது நினைக்கிறேன்’ – திருமணத்திற்கு அழைத்த செல்வமணியிடம் ஜெயலலிதா சொன்ன விஷயம்.

0
765
jayalalitha
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்கும், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக நகரி நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

-விளம்பரம்-

தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக மட்டும் ரோஜா இருக்கிறார். இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார். இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். தமிழ்நாட்டு சினிமா இயக்குனர்கள் சங்க தலைவரான ஆர்கே செல்வமணி ஒரு காலத்தில் அரசியல் படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். சொல்லப்போனால் சினிமாவில் ரோஜாவை அறிமுகப்படுத்தியதே இவர் தான். பின் இவர்கள் இருவரும் பதினோரு ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்தார்கள்.

இதையும் பாருங்க : கைகொடுத்தா சினிமா – காதல் படத்தில் வந்த கரட்டாண்டி இப்போ என்ன வேலை செய்கிறார் தெரியுமா ? வைரலாகும் அவரின் பேட்டி.

- Advertisement -

ரோஜா -செல்வமணி அளித்த பேட்டி;

இந்நிலையில் சமீபத்தில் ரோஜா மற்றும் அவருடைய கணவர் செல்வமணி இருவரும் சேர்ந்து ஜோடியாக தங்களுடைய காதல் திருமணம் குறித்து கலகலப்பாக பேட்டி ஒன்று அளித்து இருந்தார்கள். அதில் முதலில் ரோஜா கூறியிருப்பது, செம்பருத்தி படத்தில் ஹீரோயினியாக பலரையும் நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். கடைசிவரை இவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆந்திராவில் தனியார் காலேஜில் படித்துக் கொண்டிருந்த எண்ணை கண்டுபிடித்து அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார். சூட்டிங்கில் என் கண்ணை பார்த்து பேசவே இவர் ரொம்ப கூச்சப் படுவார். இவரின் அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் தான் எனக்கு கதை சொல்லுவார்கள். ஆனால், படம் முடிவதற்கு முன் நாங்கள் காதலர்களாக ஆனது தான் பயங்கர சுவாரசியம்.

செல்வமணி பற்றி ரோஜா சொன்னது;

கல்யாணத்துக்கு முன்பு இவர் டைரக்ஷனில் பல படங்களில் நடித்தபோதும் இவர் என்கிட்ட நடந்துக்கிற அணுகுமுறை மாறவே இல்லை. எப்பவுமே பரபரப்பாக சினிமா வேலைகள் பற்றிய சிந்தனையிலேயே தான் இவர் இருப்பார். அதனால் செல்வா கிட்ட மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்காது. சூட்டிங் ஸ்பாட்டில் யாராவது தப்பு செய்தால் என்னை திட்டி அவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்வார். அரசியல் படங்களை எடுத்து பெயர் வாங்கின இவருடைய படங்களிலேயே கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை படங்கள் முக்கியமானவை. அதுமாதிரியான ஏதாவது ஒரு படத்தில் இவர் என்னை அறிமுகப்படுத்தி இருந்தால் நிச்சயமாய் இவருக்கு என் மேல காதலி வந்திருக்காது.

-விளம்பரம்-

ஜெயலலிதா அம்மா பற்றி செல்வமணி சொன்னது;

இது கூட பரவாயில்லை கல்யாணம் முடிந்து நாங்கள் வெளிநாட்டுக்கு ஹனிமூன் போன இடத்தில் இவர் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்க்க போய்விட்டார் என்று ரோஜா சொல்ல உடனே செல்வமணி வெட்கப்பட்டு சிரிக்கிறார். இதனை தொடர்ந்து செல்வமணி ஜெயலலிதாவுடன் நிகழ்ந்த மறக்கமுடியாத சந்திப்பை கூறுகிறார். ஒரு வழியாக எங்க கல்யாணம் முடிவான போது ஜெயலலிதா மேடம் முதன்முறை ஆட்சியிலேயே இருந்த காலகட்டத்தில் அரசியலை மையப்படுத்தி நான் எடுத்த படங்களால் ஜெயலலிதா மேடத்துக்கு என் மேல செம கோபம். ஆனால், அவர் ரோஜா மேலாக அதிக அன்பு வைத்திருந்தார்கள். அதனால் எங்க கல்யாணத்துக்கு அவங்களைக் கூப்பிடனும் என்று ரோஜா உறுதியாக இருந்தார்.

ஜெயலலிதா அம்மா சொன்ன அறிவுரை:

ஜெயலலிதா மேடமிடம் அழைப்பிதழ் கொடுக்க நாங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்குப் போனோம். உங்களுக்கு என்னை பிடிக்காது நினைக்கிறேன் என்று பேச ஆரம்பித்த ஜெயலலிதா மேடம் போகப்போக ரொம்பவே அன்பாக பேசினார்கள். பின் அவர், ரொம்ப காலமாக ஒரு பெண்ணை காதலித்து காத்திருந்து அவங்களையே நீங்கள் கல்யாணம் செய்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்க காதலித்த காலம் வேறு அப்போ ஒருத்தரை இன்னொருத்தர் கிட்ட பிடித்த விஷயங்களை தான் அதிகம் பகிர்ந்து இருப்பிர்கள். ஆனால், கல்யாணத்திற்கு பிறகு ரெண்டு பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். அதை எல்லாம் பெரிதாக வளர விடாமல் எப்போதும் ஒத்துமையாக இருக்கணும் என்று சொன்னார்.

திருமண மேடையில் நடந்தது பற்றி செல்வமணி சொன்னது:

பின் ஜெயலலிதா அம்மா எங்க கல்யாணத்தில் கலந்து கொண்டார்கள். என் பொண்ண எந்த சூழ்நிலையிலும் கண்கலங்க கூடாது ரோஜாவை நல்லா பாத்துக்கணும் என்று சொன்னார். அதோடு மேடையில் ஏறிய அனைவரும் ரோஜாவை நல்லா பார்த்துக்கோ என்று சொல்வார்களே தவிர என்னை பற்றி ஒருத்தர் கூட பார்த்துக்கோ என்று சொல்லவில்லை என்று கூறினார். உடனே ரோஜா, இவர் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப சைலன்ட் டைப், அளவா தான் பேசுவார். ஆனால், அவருக்கும் சேர்த்து வைத்து நான் பேசுகிறேன். வீட்டிலேயும், வெளியிலேயும் சரி என்னை எந்த விதத்துலயும் இவர் கட்டுப்படுத்தியது இல்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்கணும் என்ற எண்ணம் கொண்டவர். இந்த சமூகத்தில் எல்லோருக்கும் எல்லாம் முழுமையாக கிடைக்கனும் என்று சொல்வார் என்று அப்படியே இரண்டு பேரும் தொடர்ந்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்

Advertisement