ஏஆர் ரஹ்மான் தங்கச்சிய காதலிச்சு கல்யாணம் பண்ணி விரட்டியவர்தானே – பயில்வானின் சர்ச்சை பேச்சு.

0
330
bayilwan
- Advertisement -

ஒழுக்கம் இல்லாதவர் என்று தன்னை பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மியை பயில்வான் ரங்கநாதன் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஷர்மிளா. இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலில் சமீபத்தில் பத்திரிகையாளர் பிஸ்மியை பேட்டி எடுத்திருந்தார். அப்போது பிஸ்மி, பயில்வான் ரங்கநாதன் பெண்களை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுகிறார்.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் ஒழுக்கம் இல்லாதவர் என்று பேசியிருக்கிறார். இப்படி பிஸ்மி பேசி இருப்பதை பார்த்து கடுப்பான பயில்வான் ரங்கநாதர் அவர்கள் சர்மிளா மற்றும் பிஸ்மியை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, ஷர்மிளாவுடைய youtube சேனலுக்கு பிஸ்மி பேட்டியளித்த போது என்னை ஒழுக்கம் இல்லாதவர் என்று கூறியிருக்கிறார். பிஸ்மி கப்பலுக்கு பெயிண்ட் அடித்தது தெரியாதா? பாட்டு புத்தகம் வித்தகர் என்பது தெரியாதா? எல்லா விஷயமுமே எனக்கு தெரியும். இருந்தாலும், நான் சொல்ல மாட்டேன்.

- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

என்னை பார்த்தால் அவர் ஹலோ கூட சொல்ல மாட்டார் என்று சொல்லியிருக்கிறார். நீ ஹலோ சொன்னால் என்ன? சொல்லாக்கட்டி என்ன? நான் என்ன செத்துப் போய் விடுவேனா. நான் பத்திரிகை காரன். எனக்கு வேற வேலை இல்லையா? நான் ஒழுக்கமானவன். ஆனால், பிஸ்மி ஏ ஆர் ரகுமான் தங்கச்சியை காதலிச்சு கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுட்டாரு. இல்லன்னு அவரால சொல்ல முடியுமா? என்ன ஒழுக்கம் இல்லாதவர் என்று சொல்றாரு. நான் எங்கேயாவது தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணிருக்கேனா? சிகரெட் பிடித்து பார்த்திருக்கீங்களா? எப்படி என்னை ஒழுக்கம் இல்லாதவன் என்று சொல்லலாம்.

பிஸ்மி குறித்து சொன்னது:

நான் ஒரு பத்திரிகைக்காரன். நீங்களும் ஒரு பத்திரிகைக்காரர். எந்த நேரத்திலும் பத்திரிகைக்காரர்களை தாக்கி பேசக்கூடாது என்ற தர்மத்தை நான் கடைப்பிடித்து வந்தேன். அதையெல்லாம் இப்போது மீறி விட்டேன். அதற்கு காரணம் ஷர்மிளாவும், பிஸ்மியும் தான். ஏற்கனவே யூடியூப் சேனலில் பேசியதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்டு இருந்தார். ஒருமுறை இல்லை மூன்று முறை மன்னிப்பு கேட்டிருந்தார். காரணம், அவர் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். ஷர்மிளா மடக்கி மடக்கி கேட்ட பல கேள்விகளுக்கு பிஸ்மி நேர்மையாக தான் பதில் சொன்னார்.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் எச்சரிக்கை:

ஆனால், அவர் என்னை ஒழுக்கமற்றவன் என்று சொன்னதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கக்கூடாது. நான் நடிகைகளுடன் தொடர்பில் இருந்தேனா? லிவிங் டு கெதரில் இருந்து விட்டு விரட்டி விட்டேனா? நீங்கள் தான் உங்கள் பொண்டாட்டியை விரட்டி விட்டிங்க. ஆனால் என்னை ஒழுக்கமற்றவன் சொல்ல நீங்கள் யாரு? நீங்கள் யோக்கியமாக இருந்தால்தான் என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்லணும். ஓடுற பாம்பை சீண்டினீர்கள் என்றால் கொத்தாமல் விடாது. இது எச்சரிக்கை அல்ல வேண்டுகோளும் கூட.

சினிமா பிரபலங்கள் குறித்து சொன்னது:

நான் இந்த அளவிற்கு தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் பேசுவதற்கு காரணம் நான் ஒழுக்கமானவன் என்பதால் தான். பத்திரிகையில் வரும் செய்திகளை தான் நான் பேசுகிறேன். இல்லாததை எல்லாம் நான் பேசவில்லை. மூன்று புருஷன்களை விரட்டிய ஷர்மிளாவும். பொண்டாட்டியை விரட்டிய பிஸ்மியும் என்னை தப்பு தப்பாக பேசுகிறார்கள். மக்களே, இது அவர்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்காகவும் தான் என் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகம். சினிமா பிரபலங்கள் பற்றி 60% தான் நான் சொல்கிறேன். முழுவதுமாக நான் சொன்னது கிடையாது. சொன்னால் அவர்கள் குடும்பத்தில் குழப்பம் வரும் என்பதால் தான் நான் சொல்லவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

Advertisement