விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவர் தான் – ரசிகர்கள் போட்ட போஸ்டரால் தமிழகத்தில் பரபரப்பு. யார் பாருங்க.

0
744
Vmi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளி வரும் படங்கள் எல்லாமே கோடிகளில் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் இடம் பெரும். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். மேலும், விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

விஜய்யின் பீஸ்ட் படம்:

இந்த பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் படம் உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் குறித்த தகவல்:

இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தன்னுடைய அடுத்த படம் குறித்து பிசியாக இருக்கிறார். இந்நிலையில் விஜய் அரசியல் குறித்து சோசியல் மீடியாவில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சுயேச்சையாக போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றது. இதற்காக விஜய் அவர்கள் வெற்றி பெற்றவர்களை வரவழைத்து பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்:

அதற்கு பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டிருந்தார்கள். இதில் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அரசியல்வாதிகளை கதி கலங்க வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து விஜய் அரசியலுக்கு வருவார், தமிழ்நாட்டின் முதல்வராவார் என்று பல்வேறு கருத்துக்கள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இது குறித்து விஜய் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. இந்த நிலையில் மதுரை மக்கள் செய்திருக்கும் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே மதுரை மக்கள் அடிக்கும் போஸ்டர்கள் எல்லாம் தெறிக்க விடும்.

vijay

விஜய்-பிரசாந்த் கிஷோர் புகைப்பட போஸ்டர்:

அரசியல், சினிமா, குடும்ப நிகழ்வுகள் என எல்லாமே திருவிழா போன்று கலைக்கட்டும். குறிப்பாக சினிமா, அரசியல் சார்ந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் 2020இல் முதல்வர் வேட்பாளர் என விஜயின் ரசிகர்கள் புகைப்படத்துடன் கூடிய ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் முடிவு எடுத்தால் முதல்வர் என்றும் 2021இல் தளபதி என தமிழக முதல்வர் முக ஸ்டாலினையும் 2026இல் தளபதி என நடிகர் விஜய்யையும் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இதில் உச்சகட்டமாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் படத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

விஜய்-பிரசாந்த் கிஷோர் குறித்த சர்ச்சை:

ஏற்கனவே அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தளபதி விஜய்யை நேரில் சந்தித்து இருப்பதாகவும், நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்காக பிரசாந்த் அறிவுரை கூறி இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் வந்திருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்க்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement