வலிமை வசூலை வெளியிட்ட போனி கபூர் – ஏற்றுக்கொள்ளாத ப்ளூ சட்டை (ஆனா, இவர் கேக்றதும் சரிதான ? )

0
716
bluesattai
- Advertisement -

வலிமை படத்தின் வசூல் பற்றிய தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-
valimai

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு படத்தின் கதாநாயகி செய்யும் சண்டை காட்சிகள் எல்லாம் அற்புதமாக உள்ளது. இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

வலிமை படத்தின் வசூல்:

அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது என்று தகவல்கள் வெளியானது அனைவருக்கும் தெரிந்ததே. படம் வெளியாகி 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தற்போது 300 கோடியை நோக்கி வசூல் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வலிமை படம் பற்றி எழும் சர்ச்சை:

ஆனால், ஒரு சிலர் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படம் என்றும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் பதிவு செய்திருந்தனர். இதில் எது உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். அதிலும் ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தையும், அஜித்தை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை செய்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து இவர் வலிமை படத்தின் வசூல் குறித்து கமெண்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு என்று போனிகபூர் சொல்லவில்லை?

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட பதிவு:

ப்ளூ சட்டை மாறன் பல்வேறு கமெண்டுகளை போட்டு இருந்தார். இந்த நிலையில் வலிமை படத்தின் வசூல் குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பதிவு போட்டிருக்கிறார் ‘வலிமை’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ‘வலிமை’ 200 கோடி வசூல் செய்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் என்றும் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வலிமை படத்தின் வசூல் குறித்து போனி கபூர் கூறியது:

அதில் அவர் கூறியிருப்பது, வலிமை திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டது. அதோடு படம் வசூலில் 300 கோடியை நெருங்கும் என்று நம்புகிறோம் என்று கூறி இருந்தார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத ப்ளூ சட்டை ‘வலிமை படம் 200 கோடி வசூல் என்பது விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் சங்கங்கள் அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டனரா? என்றும் தெரியவில்லை. ஆந்திரா, கேரளா மற்றும் வடக்கில் எத்தனை கோடி இந்த படம் வசூல் செய்தது? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் வசூல் குவித்த நிலவரத்தையும் தயாரிப்பாளர் சொல்வாரா? என்று எதற்குமே பதில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

Advertisement