தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இன்று அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது.
பல எதிர்பார்ப்புக்களுடன் வெளியாகியுள்ள பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைகளம்:
காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய பிள்ளையை சிறைபிடிக்க திட்டம் போடுகிறார் வீரராகவன் விஜய். ஆனால், அதை கைவிடும்படி விஜய்க்கு ஆர்டர் வருகிறது. இருந்தாலும் அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார். பின் எதிர்பாராதவிதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இருக்கிறது. இதனால் விஜய் சென்னைக்கு வருகிறார்.சென்னையில் விஜய்க்கு பூஜாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஒரு நாள் பூஜாவுடன் விஜய் வேலை சம்பந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் மால்லை ஹைஜாக் செய்கிறார்கள்.
பின் வீரராகவன் கைது செய்த அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், மாலில் விஜயும் உள்ளார் என்பது போலீசுக்கு தெரியவருகிறது. கடைசியில் விஜய் மக்களை எப்படி தீவிரவாத கும்பலில் இருந்து காப்பாற்றினார்? அந்த தீவிரவாத தலைவன் விடுவிக்கப்பட்டானா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்சன் காட்சிகள் என ஒட்டு மொத்தமாக ஸ்கோர் செய்து இருக்கிறார். சொல்லப்போனால் மொத்த படத்தையும் விஜய் தான் தாங்கி நிற்கிறார்.
படம் தொடங்கும் முதல் முடியும் வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தளபதி விஜய். இவரை தொடர்ந்து படத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் படத்தில் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். மேலும், படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்துள்ளார்கள். இதனால் விஜய் போடும் திட்டங்களை பார்க்கும் நமக்கு படத்தின் மீது விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. முதல் பாதி காமெடி, ஆக்சன் என நெல்சன் ஸ்டைலில் கொண்டு சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையில் உள்ளது.
கோகோ,டாக்டர் உள்ளிட்ட படங்களைத் இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தில் புது மாற்றத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இரண்டு பாடல்களும், பிஜிஎம் தவிர சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தில் வேறு ஒன்றும் இல்லை. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பீஸ்ட் படம் வித்தியாசமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் ரொம்ப சுமார் தான். கோகோ, டாக்டர் போன்ற இரண்டு படங்களிலும் கடத்தல் கான்செப்ட்டை கையாண்ட நெல்சன் இந்தப்படத்திலும் கடத்தல் கான்செப்டை கையாண்டிருக்கிறார்.
ஆனால், பீஸ்ட்டில் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்தார். மொத்தம் பிளாப் தான் ஆகிவிட்டது. 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ரோஜா, விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் அதே கடத்தல், அதே தீவிரவாதிகள், அதே ஆக்சன் ஹீரோ, ஹீரோவை காதலிப்பது போன்ற எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் அப்படியே அந்த படங்களின் கலவையை ஒன்றை இயக்கி இருக்கிறார் நெல்சன். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை போதும்டா சாமி என்று சொல்லுமளவிற்கு சலிப்பு தட்டி இருக்கிறது.
மேலும், இந்த கதையில் விஜய் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். விஜய் படத்தில் எத்தனை தீவிரவாதிகளை கொன்று குவித்தார் என்று தெரியாது. அந்த அளவிற்கு படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தீவிரவாதிகளை கொன்று குவித்துக் கொண்டே இருக்கிறார். அதிலும் கூர்கா படத்தோட கதையே தான் பீஸ்ட் படம். அதாவது கூர்காவில் காமெடிகள் இருந்தது, இதில் வெறும் ஆக்சன் மட்டும் தான்.
நிறைகள் :
விஜயின் நடிப்பு ஆக்க்ஷன், டயலாக் டெலிவரி சிறப்பு.
படத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், செல்வராகவன் உடைய நடிப்பு அருமையாக உள்ளது.
ஒளிப்பதிவு, பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது.
முதல் பாதி நன்றாக உள்ளது.
குறைகள் :
இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சலிப்பு தட்டுகிறது.
படம் முழுவதும் விஜயே கதை தாங்கி சென்று கொண்டு போலிருக்கிறது.
அரைத்த மாவையே அரைப்பதுபோல இயக்குனர் நெல்சன் கதையை இயக்கி இருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு வந்த அதே கடத்தல், தீவிரவாதிகள் கதையை கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் படத்தில் காண்பித்திருக்கிறார்.
பல கனவுகளுடன் எதிர்பார்த்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் ஏமாற்றம் தான் என்று சொல்லணும்.
மொத்தத்தில் பீஸ்ட் படம்- ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.