பீஸ்ட் ப்ரோமோஷன், சன் டிவி நிகழ்ச்சியில் விஜய், தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க.

0
409
beast
- Advertisement -

சன் டிவியில் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
beast

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் பாடல்கள்:

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் இல்லாமல் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார்.

பீஸ்ட் பட ரிலீஸ் குறித்த தகவல்:

மேலும், இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் கேஜிஎப் 2 படம் பீஸ்ட் படத்துடன் மோத இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது. கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

பீஸ்ட் பட நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு முன்பு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை. அதனால் விஜயின் மேடைப்பேச்சு மிஸ் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த நிலையில் விஜய்யின் நேர்காணலை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்:

பொதுவாகவே சன் டிவி நிகழ்ச்சிகளை சன் குழுமத்தில் இருக்கும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதை தான் விஜய் நிகழ்ச்சியிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை. விஜய் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியை படத்தின் இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்க இருக்கிறார். இது உண்மையிலேயே விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷலான நிகழ்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு நெல்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement