மூன்று மாதம் முக்கி முக்கி வலிமை செய்த விஷயத்தை ஒரு நாளைக்கு உள்ளாகவே முறியடித்த பீஸ்ட் ட்ரைலர்.

0
583
BeastValimai
- Advertisement -

வலிமை மொத்த ரெக்கார்ட்ஸ்சையும் பீஸ்ட் முதல் நாளே முறியடித்து சாதனை செய்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், இந்த பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லர் ஆரம்பத்தில் செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.

பீஸ்ட் ட்ரெய்லர் குறித்த தகவல்:

கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார். இந்த கடத்தலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. அதோடு தளபதி விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் டிரைலர் குறித்த ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனை:

அதுஎன்னவென்றால், நேற்று தான் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலர் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாவை சும்மா அதிர வைத்திருக்கிறது. இந்த ட்ரெய்லர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ரெக்கார்ட்ஸ்சையும் முறியடித்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் அஜித்தின் வலிமை படத்தின் 3 மாத மொத்த ட்ரைலர் ரெக்கார்ட்ஸ்சையும் விஜய்யின் பீஸ்ட் படம் ஒரே நாளில் முறியடித்து சாதனை செய்துள்ளது. சுமார் தற்போது வரை 2.1 மில்லியன் லைக்ஸ், 21 மில்லியன் வியூஸ் என பீஸ்ட் படத்திற்கு சோசியல் மீடியாவில் குவிந்த வண்ணம் உள்ளது.

வலிமை படம் பற்றிய தகவல்:

இதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் பீஸ்ட் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படம் வசூலில் வலிமை படத்தை முந்தி சாதனைப் படைக்குமா? என்பதையும் பொறுத்து இருந்து பார்க்கலாம். சமீபத்தில் தான் தல அஜித்தின் வலிமை படம் வெளியாகி இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் வலிமை படம் வசூலில் 300 கோடியை நெருங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் போலீஸாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement