தமிழில் மட்டுமல்ல இந்தி, மலையாளம் என்று பீஸ்ட் வில்லனுக்கு குரல் கொடுத்தது இவர் தான் – இதோ வீடியோ.

0
343
Ankur
- Advertisement -

பீஸ்ட் பட வில்லனுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், அனைவரும் எதிர்பார்த்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். பின் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

பீஸ்ட் படம் குறித்த விமர்சனம்:

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் பீஸ்ட் படம் சூப்பர் ஹிட் என்று சொல்கிறார்கள். இப்படி பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்றும், நிகழ்ச்சி ஒன்றில் கதை எழுதுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் நான் அமர மாட்டேன் என்று நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து உள்ளார்கள்.

பீஸ்ட் படம் செய்த வசூல் சாதனை:

இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்திருக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், பீஸ்ட் படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்திருப்பவர் சுனில் விஷ்ணு.

-விளம்பரம்-

வில்லன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்:

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் பீஸ்ட் பட வில்லனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டு கூறி இருப்பது, பீஸ்ட் படக்குழுவினருக்கு நன்றி, தளபதி விஜய்க்கு நன்றி. பீஸ்ட் படத்தில் வில்லனுக்கு நான் குரல் கொடுத்து இருக்கிறேன். மேலும், நான் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம் ஆகிய பிற மொழிகளியிலும் குரல் கொடுத்து இருக்கிறேன்.

‘தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

இதற்கு நான் ஷாஜி சார்க்கு தான் நன்றி சொல்லணும் என்று கூறி இருந்தார். ஷாஜி வேற யாரும் இல்லைங்க, பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதோடு ஷாஜி நடிகரும் ஆவார். பீஸ்ட் படத்தில் கூட ஷாஜி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், சில நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement