கூட்டத்தில் பிக்பாக்கெட் அடித்த நடிகை போலீசாரால் கைது – ரசிகர்கள் ஷாக்.

0
495
- Advertisement -

பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதை உண்டு. அதுவும் அந்த காலத்தில் பிரபலங்கள் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால், காலங்கள் செல்லச் செல்ல குறைந்து அது கொண்டே சென்றது. இப்போது உள்ள பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கிறார்களா? என்றால் கேள்விக் குறி தான், சினிமாவில் உச்சத்திலிருக்கும் நடிகர்களைக் கூட கிண்டல் கேலி செய்வது, விமர்சிப்பது போன்று பல வேலைகளை செய்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் நடிகர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்றே சொல்லலாம். அதேபோல் தற்போது இருக்கும் நடிகர்களும் முந்தைய கால நடிகர்களைப் போல நடந்து கொள்வதில்லை. இந்நிலையில் அப்படி ஒரு பிரபலத்தின் மோசமான செய்தியையே பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அவர் வேற யாரும் இல்லைங்க, பெங்காலி நடிகை ரூபா தத்தா தான்.

- Advertisement -

பெங்காலி நடிகை திருடிய சம்பவம்:

இவர் பெங்காலியில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர். இவர் வங்கமொழியில் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியில் கூட பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் குப்பைத் தொட்டியில் பர்ஸ்சு ஒன்றை வீசுவதை போலீசார் பார்த்துள்ளனர்.

ரூபா திருடிய பணம்:

பின் இவர் புத்தகக் கண்காட்சியில் அங்குமிங்கும் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின் அவரை போலீசார் பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது நடிகை ரூபாவை போலீஸ் சோதனை செய்தது. அப்போது அவர் குப்பை தொட்டியில் நிறைய பர்ஸ்களை போட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது பையில் 75 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்துள்ளது.

-விளம்பரம்-

ரூபா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்:

இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். பின் புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்களின் பர்சை தான் நடிகை பிக்பாக்கெட் அடித்தது அம்பலமாக தெரிந்தது. இதனால் போலீசார் நடிகை ரூபா தாத்தாவை கைது செய்து சட்டப்பிரிவு 379/411 கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின் போலீசார் அவரை நீதி மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். மேலும், நீதி மன்றத்தில் இதுகுறித்து தத்தா கூறியிருப்பது, நான் குடித்த குளிர்பான பாட்டிலை குப்பைத் தொட்டியில் போடும் போது அந்த பர்ஸ் குப்பைத் தொட்டியில் கிடந்தது.

நீதிமன்றத்தில் ரூபா கூறியது:

அந்த பையை தூக்கும் போது தான் போலீசார் என்னை கைது செய்தனர். இது என்னுடையது அல்ல. அது நான் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்தேன் என்று கூறினார். பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூபாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகை ரூபா தத்தா பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீடு பிரச்சனை புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement