சிறு வயதில் அம்மாவை இழந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சிறுவன் – கோபி என்ன செய்துள்ளார் பாருங்க.

0
1688
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-71.jpg

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராகசதீஸ்ஸும் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் இவர் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பது போல தான் காண்பிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட இந்த சீரியலில் நடித்து வரும் கோபி கதாபத்திரத்தை பலரும் திட்டி தீர்த்தனர். இதற்கு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் நடிகர் சதிஷ்.

இதையும் பாருங்க : பலூன் முதல் ஹோட்டல் வரை – சமந்தா, ஹன்சிகா, காஜல் போன்றவர்களின் சைட் பிஸ்னஸ் என்ன தெரியுமா ?

- Advertisement -

அதில், இது வெறும் நடிப்பு தான் எனக்கு சம்பளம் கொடுக்கறாங்க நான் நடிக்கிறேன் என்று கூறி இருந்தார் சதிஷ். பாக்கியலட்சுமி தொடரை விட விஜய் டிவியில் டாப் இடத்தில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். சமீபத்தில் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டையும் இணைந்து சங்கமம் கூட ஒளிபரப்பப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் பிளாஸ் பேக் காட்சிகள் வரவுள்ளது, அந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படி ஒரு நிலையில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பளாஷ்பேக் கதையில் நடிக்கும் ஒரு சிறுவனுக்கு ஆறுதல் கூறி உள்ளாராம் சதிஷ். அதற்கு காரணம் அந்த சிறுவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் தன்னுடைய அம்மாவை இழந்துள்ளார். இதனையறிந்த சதீஷ் இந்தச் சிறுவனிடம் நீ என்னை அம்மா அப்பாவாக நினைத்துக் கொள் என கூறி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement