பொதுவாக நடிகர்கள் சிலர் தங்கள் பணத்தை மீண்டும் சினிமாலவிலேயே முதலீடு செய்யார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி போன்றவர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள். ஆனால், நடிகைகள் இந்த ரிஸ்க்கை எடுப்பது இல்லை. அதற்கு மாறாக, பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய சம்பாத்தியத்தை முழுவதும் சொத்துக்கள் ஆகவும், ரியல் எஸ்டேட் மீதும் முதலீடு செய்வார்கள். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வாங்கி விடுகிறார்கள். நகை கடை, திருமண மண்டபம் என்று பல வகைகளில் தங்களுடைய முதலீடுகளை போட்டு தொழில் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் சினிமாவை தவிர என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம். இதில் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா சொந்தமாக ‘ ‘சகி’ என்று பெயரில் ஆன் லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இதில் பெண்களுக்கான உடைகள் விற்கப்படுகின்றன.
இதையும் பாருங்க : நான் பரவாயில்ல மறுபடியும் போய் டீ கட திறந்துப்பேன், ஆனா இந்த நாடு – மோடியின் பழைய பதிவிற்கு சித்தார்த் கொடுத்த கேலியான பதில்.
அடுத்தபடியாக தமிழில் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை பற்றி பார்க்கலாம். ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாகா நடித்து வந்த ஹன்சிகாவிற்கு தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமா தொழில் டல்லாக இருந்தாலும் அம்மணியின் தொழில் படு ஜோராக இருந்து வருகிறது
விழா நிகழ்ச்சிகளுக்கு பலூன்கள் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கும் கடையை மும்பையில் நடத்தி வருகிறார் ஹன்சிகா. அதே போல காஜல் அகர்வால் மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார். இவரது கணவரும் தொழில் அதிபர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல நேர்கொண்ட பார்வை பட நடிகை சென்னை வேளச்சேரியில் மாலில் ஹோட்டல்( ‛பெர்சி’ என்ற பெயரில் கபே) ஒன்றை நடத்தி வருகிறார்.