தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் பற்றி பாக்கியலட்சுமி சீரியல் கோபி பகிர்ந்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.
இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.
இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் ஆங்கர் திவ்யாவை நினைவிருக்கா ? திருமணத்திற்கு பின் எப்படி இருக்கார் பாருங்க. வெளியான புகைப்படம்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதையும் பாக்கியா கதாபாத்திரம் உணர்த்துகிறது. தற்போது சீரியல் உச்ச கட்ட பரபரப்பை எட்டி வருகிறது. அதிலும் கடந்த 2 வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கோபி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
சீரியலின் கதை:
கோபி காதலிக்கும் நபர் ராதிகா என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதனால் பாக்கியா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் கேள்வி கேட்கிறார் பாக்கியா. கோபி-ராதிகா இருவரும் பேசியதை வீட்டில் எல்லோரும் முன்னிலையிலும் பாக்கியா நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். கோபி வீட்டில் புயல் அடித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், கோபி பற்றிய உண்மையை மொத்த குடும்பத்திற்கும் தெரிந்தவுடன் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இறுதியில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கோபியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்:
இதற்கு பின் என்ன ஆகுமோ? ராதிகா- கோபி திருமணம் நடக்குமா? என்ற பல கேள்விகளுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. அதுவும் இந்த வாரம் முழுவதும் பலரும் கோபியை திட்டி தீர்த்து வருகின்றனர். இது குறித்து கோபி, நான் நடிகன். இது நடிப்பு மட்டும் தான் என பலமுறை விளக்கம் கொடுத்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் கோபியை வறுத்து எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கோபி என்கிற சதீஷ் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் பற்றி கூறியிருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் கோபி சொன்னது:
அதில் அவர், 5 வயதில் தம்பியை இழந்தேன், விபத்தில் பெற்றோரையும் இழந்தேன். ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு அரை ட்ரவுசர் மட்டும் தான் வைத்து இருந்தேன். என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்ந்தேன். எனக்கு தமிழ் பேச சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, எனக்கு பெயர் புகழ் கொடுத்து இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான். தமிழ் ஒரு மொழி மட்டும் இல்லை. அது கலாச்சாரம். அது ஒரு மதம். அது ஒரு சக்தி. வாழ்க தமிழ் என்று கோபி சதீஸ் பேசியிருக்கிறார்.