சூப்பர் சிங்கர் ஆங்கர் திவ்யாவை நினைவிருக்கா ? திருமணத்திற்கு பின் எப்படி இருக்கார் பாருங்க. வெளியான புகைப்படம்.

0
887
divya
- Advertisement -

சமீப காலங்களாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனலின் டி ஆர் பி ரேடிங்க்காக தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மத்தியில் மிக பெரிய பெரிய அளவில் வரவேற்கப்படுகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்களாக திகழ்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தொகுப்பாளர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் டிடி, கோபிநாத், ஜெகன், மாகாபா, பிரியங்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் திகழ்ந்தவர் திவ்யா விஜய்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘இப்பவே இப்படி பண்றயே’ – குழந்தை என்றும் பாராமல் கொட்டாச்சி மகளை கடிந்த ராஜன். திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

வி.ஜே திவ்யா திரைப்பயணம்:

திவ்யா அவர்கள் முதலில் வி.ஜே.வாக தான் மீடியாவுக்குள் அறிமுகமானார். பின் மிகப் பிரபலமான வி.ஜே.வாக திவ்யா மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பத்து வருடங்களாக மீடியா துறையில் தான் பயணித்தார். பின்னர் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணி ஆற்றி உள்ளார். பின்னர் மலையாள மொழியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகியும் ஆவார். மேலும், இவர் வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் பாடியும் உள்ளார்.

-விளம்பரம்-

வி.ஜே திவ்யா திருமணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பாடி உள்ளார். பின்னர் இவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மேலும், சமீப காலமாகவே சின்னத்திரை, சினிமா என எதிலுமே திவ்யா பங்கேற்கவில்லை . அதுமட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி பக்கமே காணவில்லை. இது குறித்து பலரும் வின வினார்கள். பின் தொகுப்பாளினி திவ்யா உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி சிபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் திவ்யா :

திவ்யா அவர்கள் நீண்ட நாட்களாக தனது நண்பரான சிபு தரகன் என்பவரை காதலித்து வந்து உள்ளார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. மேலும், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தொகுப்பாளினி திவ்யாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார்கள்.

திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் :

திருமணத்திற்கு பிறகு இவர் சுத்தமாகவே மீடியாவை விட்டு விலகினார். இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்தும், தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்தும் வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement