அட, ஜெனி அம்மா சினிமாவில் அறிமுகமானது இந்த மிஸ்கின் படத்தில் தானா – எந்த படம் பாருங்க.

0
2308
mona
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவெற்பை பெற்று இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் தொடர் லிஸ்டில் தான் இந்த சீரியலும் இடம்பெற்று உள்ளது.

இதையும் பாருங்க : தேசிய விருதுக்கு பின் குவிந்த பட வாய்ப்பு, கொட்டிய பணம் – புதிய தொழிலை அறிவித்த கீர்த்தி சுரேஷ்.

- Advertisement -

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கோபியாக சதீஷும், பாக்கியலட்சுமியாக சுசித்ராவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை மோனா பத்ரே, கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மேலும், இவர் தமிழில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ஒரு சில படங்களில் கூட நடித்து இருக்கிறார். இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது மிஸ்கின் தான். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘ஓநாயும் ஆட்டுக்குட்டி’ படத்தில் கண் பார்வை இல்லாத நபராக நடித்து இருப்பார். அதுவும் இவரது முதல் படமே அந்த படம் தான் என்று மோனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement