அந்த 3 பேருக்கு தந்த அதே பணத்தை இவருக்கும் கொடுங்கள். மித்ரனுக்கு, பாக்யராஜ் எழுதிய கடிதம்.

0
2603
Mithran
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதை திருட்டு விவகாரம் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார், பிகில் போன்ற படங்கள் தங்களுடைய கதை என்று சிலர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த பஞ்சாயத்துகளை நடிகர் பாக்யராஜ் தலைவராக உள்ள எழுத்தாளர் சங்கம் தான் முடித்து வைத்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஹீரோ’ திரைப்படமும் இதே போன்று கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது பெரும் சர்ச்சையையும் பரபரப்யும் ஏற்படுத்தியுள்ளது. போஸ்கோ பிரபு

-விளம்பரம்-

- Advertisement -

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து எடுத்த படம் தான் ‘ஹீரோ’ திரைப்படம். கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் அட்லி இடம் உதவியாளராக இருந்த போஸ்கோ பிரபு என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் ஹீரோ கதை போஸ்கோ பிரபு பதிவு செய்திருந்த கதையுடன் ஒத்தபோவதாக கடிதம் அளித்து உறுதி செய்தது.

இந்த நிலையில் போஸ்கோ பிரபுவிற்கு பாக்யராஜ் எழுதிய கடிதம் இணையத்திலும் வெளியானது. இதனால் இயக்குனர் மித்ரன் மிகுந்த மனவருத்தப்பட்டாராம். இதனால் எழுத்தாளர் சங்கம் சார்பாக பாக்யாராஜ், மித்ரனுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில்சங்கத்தின் கூட்டத்திற்கு மரியாதை தந்து ஒத்து வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. உங்களிடம் கேள்வியை எழுப்பியது உங்களுக்கு எவ்வளவு மன காயத்தை உண்டாக்கி உள்ளது என்பது நீங்கள் பேசிய பேச்சில் இருந்து உணர முடிந்தது. ஒரு நிமிடம் பொறுமையாக சிந்தித்தால் கதையை பறிகொடுத்த அவருக்கும் அதே காயம் இருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

-விளம்பரம்-
Mithran

இதற்கு நான் காரணமில்லை என்று உங்கள் தரப்பில் கூறினாலும், அவர் யோசித்த அதே விஷயம் தான் உங்கள் கதையின் மையக் கருத்தாக இருப்பதையும் நீங்கள் மறுக்க முடியாது. தங்கையின் கண்டுபிடிப்பு- வில்லன் அதை மறைத்து மோசடி செய்து மாற்றுதல்- அதனால் தங்கை தற்கொலை – வில்லன் செய்த தவறை ஹீரோ அம்பலப்படுத்தல். இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதுடன் தீர்மானித்து இந்த முடிவை தவிர்க்க முடியாமல் எடுத்துள்ளது. சங்கத்தில் தாங்கள் மூன்று கதாசிரியர்களை வைத்து விவாதித்துதான் இந்தக் கதையைப் படமாக்கியதாகக் கூறினீர்கள். அதன்படி நீங்கள் ஏற்கெனவே விவாதித்த மூன்று கதாசிரியர்களுடன் இவரையும் நான்காவதாகச் சேர்த்து அவர்களுக்குத் தந்த அதே ஊதியம் ரூ.10 லட்சத்தை இவருக்கும் தர வேண்டுகிறேன் என்று குறிப்பிடபட்டுள்ளது.

Advertisement