திருமதி செல்வம் சீரியலில் வந்த இந்த நடிகையை நினைவிருக்கிறதா ? தற்போதும் எப்படி இருக்கார் பாருங்க. மாடர்ன் உடையில் அவர் கொடுத்த கலக்கலான போஸ்.

0
2521
rindhya
- Advertisement -

-விளம்பரம்-

வாய்ப்பு கேட்டு திருமதி செல்வன் சீரியல் நடிகை எலிசபெத் சுராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சமீப காலமாக சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எலிசபெத் சுராஜ். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகி இருந்த தொடர்களில் நடித்து இருக்கிறார். அதில் பெரும்பாலும் இவர் வில்லியாக தான் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் நடித்த கனா காணும் காலங்கள்,

இதையும் பாருங்க : ரஜினி கண்டக்டராக இருந்த போது எனக்கு சீட் போட்டு வைப்பார். ஆனால், அவர் நடிகரான பின் – சர்க்கஸ் நடிகர் துளசி (இவர் யார் தெரியுமா ? )

எலிசபெத் சுராஜ் பற்றிய தகவல்:

அனுபல்லவி, கலாட்டா குடும்பம், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரை படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த தேன்மொழி பிஏ என்ற சீரியலில் மாமியாராக நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

எலிசபெத் சுராஜ் நடித்த சீரியல்கள்:

அதற்கு பிறகு சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த சித்தி-2 சீரியலிலும் இவர் நடித்திருந்தார். இந்த சித்தி 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு எலிசபெத் சுராஜ் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. தற்போது சின்னத்திரையில் போதிய வாய்ப்பு இல்லாமல் எலிசபெத் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வாய்ப்பு கேட்டு உருக்கமான பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

எலிசபெத் சுராஜ் பதிவிட்ட பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, சினிமா துறை, தொலைக்காட்சித் துறை அன்பர்களுக்கு எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை வேற்று மாநில நடிகர்களுக்கு தராதீர்கள். நான் மூழ்கி கொண்டிருக்கிறேன். மரணித்த பின் எனக்காக அழ வேண்டாம். இரங்கல் கடிதம் எழுத வேண்டாம். நான் உயிரோடு இருக்கும் போது உதவி கரம் நீட்டுங்கள். பிழைத்துக் கொள்வேன். நான் சார்ந்த சங்கங்களின் உயர் பதவியில் உள்ளவர்கள் கேட்க தவறியதை நான் கேட்கிறேன்.

கடிதத்ததில் எலிசபெத் சுராஜ் கூறியது:

இது எனக்காக மட்டும் இல்லை. என் போன்ற நிறைய நடிகர்களுக்குக்காகவும் ஒலிக்கும் என் குரல். நான் கரை ஏறிய பின் அனைவருக்கும் கரம் கொடுப்பேன் என்று எழுதி இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இதற்கு பின்பு இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement