பிரசவ வலியில் துடித்தது முதல், குழந்தையை முதல் முதலில் கையில் வாங்கியது வரை வீடியோவாக வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை.

0
517
barathaNaidu
- Advertisement -

சின்னத்திரை நடிகை பிரசவ வலியில் துடித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் தான் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்டது. இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், நடித்து இருந்தார்கள். இவர்களின் கெமிஸ்ட்ரி வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் இருந்தது. இவர்கள் இருவருக்கும் நிகராக செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் மித்ரா.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு இவர் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘தேன் மிட்டாய்’ என்ற மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும் பரதா நடித்து இருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ என்ற படத்திலும் பரதா கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்.

பரதா திரைப்பயணம்:

ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. இப்படி இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது செம்பருத்தி சீரியல் தான். இதனை அடுத்து இவர் பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இருந்தது. திருவண்ணாமலையில் இவர்களின் திருமணம் எளிமையாக நடைப்பெற்றது. மித்ரா திருமண கோலத்தில் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

குழந்தை பிறந்த செய்தி:

லாக் டவுனில் நடந்த திருமணத்தை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான முறையில் இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு குழந்தை பிறந்ததாக அறிவித்து இருந்தார்.

பிரசவ வலி வீடியோ:

இந்த நிலையில் பரதா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பிரசவத்தின் போது தான் அனுபவித்த வலி தொடர்பான வீடியோவை தான் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும், இதுதான் தாய்மை என்று பரதாவை பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement