காதலர் தினத்தில் VJ அர்ச்சனாவுடன் டூர் சென்றாரா அருண் – வைலாகும் வீடியோ.

0
1454
- Advertisement -

பாரதி கண்ணம்மா அருண் பிரசாத் விஜே அர்ச்சனாவை காதலிப்பதை உறுதிப்படும் வகையில் அவரே வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்க கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்து. இதனால் பாரதிகண்ணமா சீரியல் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே பாரதி கண்ணம்மா பாகம் 2 அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா 3 ;

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த 6 ஆம் தொடங்கி தற்போது இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. கடந்த சீசனை போல இந்த சீசனும் அதே பெயரில் தான். சீரியலில் உள்ள பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, அஞ்சலி, அகிலன், வெண்பா போன்ற கதாபாத்திரங்கள் அதே பெயருடன் தான் இருக்கிறது. ஆனாலும் சில புதிய கதாபாத்திரங்களும் இந்த சிரியலில் அறிமுகமாகியிருக்கின்றனர். ஆனாலும் பழைய பாரதி அருண் பிரசாத்தை பலரும் மிஸ் செய்வதாகத்தான் ப்ரோமோக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அருண் பிரசாத் – விஜே அர்ச்சனா :

இந்த நிலையில் பாரதிகண்ணமா முதல் பாகத்தின் கதாநாயகன் பாரதியாக நடித்த அருண் பிரசாத் ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக பல நாட்களாகவே சில கிசு கிசு சோசியல் மீடியாவில் பறவி வந்தது. மேலும் இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்தம் செய்து கொண்டதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவலை இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

ஒன்றாக புகைப்படங்கள் :

இந்த நிலையில் தான் சமீபத்தில் விஜே அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் கார் ஒன்றில் ஒன்றாக புகைபடம் எடுத்துக்கொண்டனர் அது ரசிகர்களின் சந்தேகத்தை அதிகரித்து. இப்படியொரு நிலையில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பிரபலங்கள் பலரும் தங்களுடைய காதலர்களை வெளிப்படுத்தியும், அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியும் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வந்த நிலையில் தான் அருணபிரஷாத் மற்றும் அர்ச்சனா தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டிருந்தனர். அந்த பதிவினால் தான் இருவரும் மாட்டிக்கொண்டுள்ளனர்.

மாட்டிக்கொண்ட அருண் .

அதாவது அருண் பிரசாத் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் காடுகளுக்கு விடுமுறை சென்றது போன்று போட்டில் அமர்ந்தபடி ஒரு வீடியோ பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிர்ந்திருந்தார். இதில் என்ன பிரச்னை என்றால் விஜே அர்ச்சனாவும் இதே போன்ற ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இவர்கள் இருவரும் காதலிக்கின்றனரா? எனவும், அர்ச்சனா போட்டிருக்கும் கண்ணாடியில் அருண் பிரசாத் தெளிவாக தெரிகிறார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களது வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement