பாரதி கண்ணம்மா 2 சீரியலை விமர்சித்து நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரின் முதல் பாகம் கடந்த ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.
பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிவடைந்ததை தொடந்து இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி போன்ற முந்தைய சீசன் கதாபாத்திரங்களின் பெயர்களையே இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
பாரதி கண்ணம்மா 2 சீரியல்:
பெயர்களையே மட்டும் இல்லாமல் கண்ணமாவாக முதல் சீசனில் நடித்த நடிகை வினுஷா தேவி இந்த சீசனிலும் நடிக்கிறார்.
பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார். சீரியலில் பாரதி பெரிய வீட்டு பிள்ளை. கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வருகிறார். இவரின் பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா. இவர் எங்கு செல்வது என்று அலைந்து கொண்டு இருக்கும் போது தான் கண்ணம்மாவின் அறிமுகம் சித்ராவிற்கு கிடைக்கிறது.
சீரியலின் கதை:
ஆனால், எதிர்பாராத விதமாக விபத்தில் கண்ணம்மா இறந்து விடுகிறார். கண்ணம்மா குடும்பத்தை காப்பாத்த சித்ரா கண்ணம்மாவாக மாறுகிறார். பின் பாரதிக்கு – கண்ணம்மா அறிமுகம் ஆகிறார். இதன் தொடக்கத்திலே இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின் இவர்கள் மத்தியில் காதல் ஏற்படுகிறது. தற்போது சீரியலில் பாரதியை வெண்பாவிற்கு திருமணம் செய்ய சௌந்தர்யா ஏற்பாடு செய்கிறார். ஆனால், சௌந்தர்யா வெண்பாவிற்கு தெரியாமலேயே கண்ணம்மாவை கோயிலுக்கு வரச் சொல்லி எப்படியோ அவரை சம்மதிக்க வைத்து பாரதி திருமணம் செய்து கொள்கிறார்.
இறுதி கட்டத்தில் சீரியல்:
இது இவர்களுடைய இருவீட்டாருக்கும் தெரிந்தவுடன் கடுமையாக கோவிலில் பேசி திட்டுகிறார்கள். ஏதோ சொல்லி பாரதி கண்ணம்மா இருவரையும் பாரதியின் தாய் சௌந்தர்யா ஏற்றுக்கொண்டார். பின் பாரதியின் அப்பா தான் தன்னை நாசம் செய்த நபர் என்று கண்ணம்மாவிற்கு தெரிய வருகிறது. இருந்தாலும், எதை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். கடைசியில் பாரதியின் தந்தையை கண்ணம்மா தான் கொலை செய்து ஜெயிலுக்கு சென்றார் என்பது தெரிய வந்துவிட்டது.
நெட்டிசன்கள் கிண்டல்:
இதனால் பாரதி, கண்ணம்மாவை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா? என்ன நடக்கும் என்று பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிக்க எடுக்கிறார்கள்.
கிட்டத்தட்ட பாரதி கண்ணம்மா 2 சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிலர், இதுவரைக்கும் வந்த சீரியலிலேயே இந்த சீரியல் மட்டும் தான் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.