நடிப்புல பாரதியே மிஞ்சிட்டாங்க – மேடையில் கண்ணீர் விட்டு கேள்வி கேட்ட பாரதி கண்ணம்மா ரசிகை – நீங்களே பாருங்க.

0
753
bharathi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.இதற்கெல்லாம் மேலே சென்று சமீபத்தில் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல். கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவின் மாமியாரிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது.

- Advertisement -

என்னதான் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றாலும் இந்த சீரியல் அடிக்கடி ட்ரோலில் சிக்கிவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் 6 வது விஜய் அவார்ட்ஸ் விழாவின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த விழாவில் பாரதி கண்ணம்மா சீரியல் குழு மேடையில் வந்த போது ரசிகை ஒருவரும் மேடைக்கு வந்துள்ளார். அப்போது அந்த ரசிகை ஹீரோவை பார்த்து குறை இருக்குனு தெரிஞ்சும் ஏன் நீங்க அந்த பொண்ணு கிட்ட சொல்லல என்று கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடீயோவை பார்த்த பலரும் அந்த பெண் ரசிகையை படு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன், பாரதியும் கண்ணம்மாவும் இணைந்துவிட்டால் கதை முடிந்துவிடும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement