படு தோல்வியடைந்த பாரதிராஜா படம், சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகர். தற்போதும் வாய்ப்பிற்காக காத்திருப்பு.

0
926
Kannan
- Advertisement -

பாரதிராஜா படத்தினால் தோல்வி அடைந்து காணாமல் போன ஹீரோவின் தற்போதைய நிலை குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது.

- Advertisement -

பாரதிராஜா திரைப்பயணம்:

அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் படங்கள் மட்டும் இல்லாமல் பல ஹீரோயின், ஹீரோக்களை உருவாக்கியும் இருக்கிறார். அதில் சில ஹீரோ, ஹீரோயின்கள் இன்று வரை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்,சில பேர் மட்டும் தான் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், இவருடைய இயக்கத்தில் வெளிவந்து படங்களினால் சில நடிகர்களின் வாழ்க்கையும் தடம் புரண்டு இருக்கிறது.

காதல் ஓவியம் படம்:

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து தோல்வி அடைந்த படம் காதல் ஓவியம். இந்த படத்தில் இளையராஜா உடைய பாடல்கள் ஹிட் கொடுத்தாலும் கதை பெரிதாக வரவேற்கப்படவில்லை. அந்த படம் 1982 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் கண்ணன் தான் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக ராதாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் கண்ணன் பார்வையற்ற இளைஞனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடிகர் கண்ணன் அளித்த பேட்டி:

இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது. இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் தோல்விக்கு ஹீரோதான் காரணம் என்னும் பலரும் விமர்சித்து இருந்தார்கள். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் கண்ணன் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் என்று சொல்லலாம். இந்த நிலையில் பாரதிராஜாவின் ஹீரோ நடிகர் கண்ணன் பல வருடங்களுக்குப் பிறகு பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர், நான் சிந்தி இனத்தை சேர்ந்தவன். என்னுடைய பெயர் சுனில் கிருபளானி.

படம் தோல்வி குறித்து சொன்னது:

என்னுடைய குடும்பம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு அகதிகளாக வந்தவர்கள். பெங்காலி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு தமிழில் காதல் ஓவியம் என்ற படத்தில் மூலம் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நான் பார்வையில்லாத வேடத்தில் நடித்திருந்தேன். இதனாலே எனக்கு பெரிதாக மக்கள் மத்தியில் கவரவில்லை. இந்த படம் தோல்வி அடைந்தது எனக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் நான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன். தற்போது நான் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement