சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நாஞ்சில் விஜயன் – மணப்பெண் யார் தெரியுமா ?

0
1420
Nanjil
- Advertisement -

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

நாஞ்சில் – சூர்யா தேவி பிரச்சனை :

அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே கடந்த 2020ஆம் ஆண்டு இவருக்கும் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவிக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து காரணமாக சண்டை ஏற்பட்டது.இந்த சண்டையில் சூர்யா தேவி அடி ஆட்களுடன் சென்று நாஞ்சில் விஜயனை கடுமையாக தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்தனர்.

சிறைக்கு சென்ற நாஞ்சில் :

பின் சூர்யா தேவி போலீசில் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் வனிதா உடன் நாஞ்சில் விஜயன் சேர்ந்து அவதூறாக பேசிவிட்டு இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடிதடி வரை சென்றது. பின்னர் சூர்யா குடுத்த புகாரின் பெயரில் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடிக்கப்பட்டு சமீபத்தில் தான் வெளியில் வந்தார்.

-விளம்பரம்-

நேற்று நடந்த திருமணம் :

சிறையில் இருந்து வெளியே வந்த நாஞ்சில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கூட பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு சமிபத்தில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயன் தனது திருமணத்தை முடித்து இருக்கிறார்.

மனைவி குறித்து பேசிய நாஞ்சில் :

ஏற்கனேவே தனது திருமணம் குறித்து பேசிய நாஞ்சில் விஜயன் ‘எங்களோடது சாதாரண குடும்பம் தான். டிவியில் வருமானம் எல்லாம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். அந்த ஒரு சூழலில் தம்பியின் வருமானத்திற்காக சென்னையில் ஒரு கடை வைத்துக் கொடுத்தேன். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். தங்கச்சி கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. இந்த இரண்டு கடமைகளும் தான் என் கண் முன்னாடி பெருசாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement