வேதாளம் படம் 10 மடங்கு Cringe – படத்தை ரீ-மேக்கும் செய்துவிட்டு படத்தையும் கேலி செய்த தெலுங்கு இயக்குனர்.

0
1828
meherRamesh
- Advertisement -

வேதாளம் படத்தை தெலுங்கில் இயக்கி இருக்கும் இயக்குனர் வேதாளம் படத்தை Cringe என்று கூறியுள்ள சம்பவம் தமிழ் ரசிகர்ளை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. சமீப காலமாகவே தமிழ் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீ – மேக் செய்யப்படுவது அதிகரித்து கொண்டு வருகிறது. அதிலும் சமீப காலமாக பல்வேரு சூப்பர் ஹிட் தமிழ் படங்களை தெலுங்கில் ரீ – மேக் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுதான் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீ – மேக்கான ‘நாரப்பா’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் தமிழ் ரீ – மேக்கை கையில் எடுத்துள்ளார். அதுவும் அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீ – மேக்கில் தான் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் சிரஞ்சீவி நடித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த வேதாளம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீ – மேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இந்த படத்தில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்ஷும், தமன்னா கதாபாத்திரத்தில் தமன்னாவே நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனரிடம், படத்தின் ட்ரைலரை பார்த்து ஒரு சிலர் Cringeஆக இருக்கிறது என்று சொல்கிறார்களே என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த அவர் ‘இந்த ட்ரைலர் Cringe என்றால் வேதாளம் படம் இதை விட 10 மடங்கு Cringe. ஆனால், அதை எல்லாம் என் படத்தில் வைக்காமல், திரைக்கதையை எல்லாம் மாற்றி வித்யாசமாக செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, அஜித் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வேதாளம் படம் Cringe என்றால் பின்னர் ஏன் அதனை ரீ – மேக் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பதிவு ஒன்றை போட்டுள்ள மெஹர் ரமேஷ் ‘வேதாளம் படத்தை 2015 ஆம் ஆண்டு பார்த்த போதே எனக்கு பிடித்துவிட்டது.

அந்த படத்தை பார்த்தே போதே சிறுத்தை சிவா பல கோடி மக்களின் பிரதிபலிப்பாக அண்ணன் தங்கை பாசத்தை எப்படி இப்படி காட்னார் என்று வியந்தேன். 2009 ஆம் ஆண்டு அஜித்தின் பில்லா படத்தை பிரபாஸை வைத்து ரீ – மேக் செய்தேன். தற்போது அஜித் சாரின் அதிரடி என்டர்டெய்னர் படமான வேதாளம் படத்தை மெகா ஸ்டாரை வைத்து எடுத்துள்ளேன். இன்னும் இரண்டு நாளில் உலகம் முழுதும் போலா ஷங்கர் வெளியாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்த படத்தில் நடித்த காரணம் குறித்து பேசிய நடிகர் சிரஞ்சீவி ‘ வேதாளம் திரைப்படம் எந்த ஒரு OTT தளத்திலும் வெளியாகவில்லை. அந்த காரணத்தினால் தான் அந்த படத்தின் ரீ – மேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கே அழைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். ஏற்கனவே சிரஞ்சீவி,விஜய்யின் கத்தி ரீ-மேக்கில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement