பால் எல்லாம் பத்திரமா பாத்துக்கோங்க – ஜெயிலர் ரிலீஸ் முன்னிட்டு எச்சரிக்கை விடுத்த பால் சங்க தலைவர்.

0
1462
- Advertisement -

ஜெயிலர் படம் ரிலீஸ் குறித்து பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பதிவிட்டு இருக்கும் எச்சரிக்கை அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 80 கால கட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த.

-விளம்பரம்-
Jailer

இது அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்த தகவல் தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா,யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதேபோல் இந்த வாரம் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மாஸாக பேசியிருந்தார். தற்போது இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்:

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை ஜெயிலர் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கட்அவுட் அடித்தும், பாலபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், அமர்க்களம் செய்து வருகின்றார்கள். பொதுவாகவே ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகுவது என்றாலே ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் அறிக்கை:

இதனால் அவர்கள் கடைகளில் பால் வாங்குவதைவிட திருடுவதை தான் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படம் வெளியாவதை முன்னிட்டு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர், ’பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது பால் பாக்கெட்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தாலும் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையில் சமூக விரோதிகள் பால் பாக்கெட்டுகளைத் திருடக் கூடும் என்பதால் விநியோகஸ்தர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்

Advertisement