கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 10000 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் ஊரடங்கு முடியவிருந்த நிலையில் தற்போது மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அனைவரும் வீட்டில் அடங்கியுள்னர். அதே போல பிரபலங்கள் கூட தங்களை இந்த நோயில் இருந்து பாதுகாத்துகொள்ள வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் தனது மகன் குறித்து கவலையில் இருக்கிறாராம்.
சினிமாவைப் பொறுத்தவரை வாரிசு நடிகர்கள் வருவது வாடிக்கையான விஷயம் தான் அந்த வகையில் சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி பாக்கியராஜின் மகன் சாந்தனு, எஸ் ஏ சந்திரசேகரன் மகனான விஜய் என்று எப்படி நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார்.நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.
இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியானது.
இந்த நிலையில் வெளிநாட்டில் படித்து வரும் தனது மகன் சஞ்சய் குறித்து விஜய் வருத்தப்பட்டு வருவதாக இணையத்தில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் விஜய் மகன் கனடாவிலேயே தங்க வேண்டிய சூழலால் ஏற்பட்டுள்ளதாம். அங்கு கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் மகனை பிரிந்திருப்பதை நினைத்து தளபதி விஜய் மிகவும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறார் என்று நடிகர் சித்ரா லட்சுமண் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட விஜய் மகன் சஞ்சய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதே போல, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய், படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க போகிறார் என்ற பேச்சும் அடிப்பட்டது. தொலைபேசி பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஷ், (இவர் விஜய்யின் தீவிர ரசிகர், மேலும், இவரது வீட்டிற்கு விஜய்யின் பெற்றோர்கள் அடிக்கடி செல்வதும் வழக்கம். சமீபித்தில் கூட இவரது வீட்டிற்கு சென்ற ஷோபனா சமையல் கூட செய்திருந்தார்.)விஜய்யின் மகன் சஞ்சய் இந்த வருட இறுதியில் கனடாவில் தனது படிப்பை முடிக்கிறார். அடுத்த வருடமே சினிமாவில் அவர் மாஸ் எண்ட்ரீ கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.