முடிந்தது இந்த வார நாமிநேஷன் – மிக்ஸர வெளியேற்றதா, டைட்டில் வின்னர வெளியேற்றதா இல்ல பாய்சன வெளியேற்றதா – உங்கள் கருத்து என்ன?

0
469
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு போன வாரம் சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் 7:

அதோடு இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. மேலும், பிரதீப் தரப்பில் இருந்து எந்த ஒரு வாதத்தையும் கேட்காமல் அவரை கமலஹாசன் வெளியேற்றியது ரொம்ப தவறு என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். இதனை அடுத்து சனிக்கிழமை எபிசோடில் கூட மாயா, பூர்ணிமா, ஜோதிகா, ஐசுவை பார்த்து கமல், நீங்கள் வைத்த குற்றசாட்டுகள் எல்லாம் உண்மை தானா? நான் ரெட் கார்ட் கொடுக்கவில்லை. அதற்கான அங்கீகாரம் உங்களிடம் தான் இருந்தது.

கமல் பேசியது:

நீங்கள் நினைத்திருந்தால் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் என்று இன்று சாரா மாறியாக கமல் வெளுத்து வாங்கி இருந்தார். மேலும், கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீடு இருவருக்குமே கடுமையான கலவரம் நடந்தது. மேலும், நேற்று எபிசோடில் கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் ஜோவிகா, ஐசு, தினேஷ் பங்கு பெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நடுவராக மாயா இருந்தார். ஒரு வளையத்திற்குள் பாலை சுற்றி நடக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொன்னார். மணி அடித்தவுடன் தினேஷ் சர சர என்று டாஸ்கை சில நிமிடத்திலேயே முடித்து விட்டார். இது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வாரம் கேப்டன்:

இன்னொரு பக்கம், ஜோவிகா, ஐசு என்ன நடந்தது என்று புரியாமல் குழப்பத்தில் நின்றிருந்தார்கள். இறுதியில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். பின் இந்த வாரம் பிக் பாஸ்- ஸ்மால் பாஸ் என்ற பிரிவு கிடையாது. இந்த வாரம் எல்லாம் ஒரே பிக் பாஸ் வீடுதான் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இது போட்டியாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால், சில பேருக்கு வருத்தம் என்று சொல்லலாம். பின் வீட்டில் வேலை செய்வதற்கு அணிகளை கேப்டன் ஆன தினேஷ் தேர்வு செய்திருந்தார்.

நாமினேஷன் பட்டியல் :

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில்,
சரவணா விக்ரம்
பூர்ணிமா
ரவீனா
மணி
பிராவோ
அக்ஷயா
கானா பாலா
இதில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்று உங்களுடைய கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Advertisement