பிக் பாஸ் பிரபலம் பிரதீப் குறித்து நடிகர் ஆதி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் நடிப்பில் வெளியாகி இருந்த டாடா என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு முன்பும் இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருந்தார்.
இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது டாடா படம் தான். அதற்கு பின் இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருந்தது. அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி:
அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.
நெட்டிசன்கள் கருத்து:
பிரதிப்பை விட நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகிய பலருமே மோசமாக வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும்போது பிரதீப்பை எப்படி வெளியேற்றலாம் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். மீண்டும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தும் பிரதீப் வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆரி பதிவு:
அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலுமே பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும், பிக் பாஸ் பிரபலமான ஆரி அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் பிரதிபிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
பிரதீப் குறித்து சொன்னது:
உங்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைய நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். கூடிய விரைவில் நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது ஆரியின் இந்த பதிவுதான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஆரி. இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று சொல்லாம். இவர் சமூக சேவைகளை கூட செய்து வருகிறார்.