பிக் பாஸ் போய்ட்டு வந்துட்டா மட்டும் அது நடந்துடுமா – ஆதங்கத்துடன் பேசிய ரஷிதா

0
586
rachitha
- Advertisement -

ரக்ஷிதாவின் புது படத்திற்கான அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம், நாம் இருவர் நமக்கு இருவர் 2, இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்கள் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் உப்புக் கருவாடு, மெய்நிகரே, ஃபயர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இது தவிர சில கன்னட படங்களிலும் நடித்தார். இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

தினேஷ்- ரக்ஷிதா சண்டை:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. மேலும், படங்களில் ரக்ஷிதா நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு முழுவதும் தினேஷ்-ரக்ஷிதா பிரச்சனை தான் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு இருந்தது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

தினேஷ்- ரக்ஷிதா சர்ச்சை:

அதற்குப் பின் இவர்கள் இருவரும் முறையாக விவாகரத்து செய்ய இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவர் தன்னுடைய மனைவி குறித்து தான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இருந்தாலும் ரக்ஷிதா மனம் வரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷ், நான் உள்ளே போகும்போது எப்படி இருந்ததோ, அதே மாதிரி தான் அவரும் இருக்கிறார். இனி ரட்சிதாவிடம் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை இல்லை என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ரஷிதாவின் புதிய படம் :

தற்போது ரஷிதா  ‘Xtreme’ எனும் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரஷிதா ‘என்னுடைய அடுத்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும். அது மட்டும் இல்லாமல் கண்டதையெல்லாம் வைரல் ஆக்குவதை விட இதை வைரல் ஆக்குங்கள்’ என்றும் பதிவிட்டு இருந்தார். இந்த படம் குறித்து கூறிய அவர் ‘ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் பங்கேற்றால் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை. நாம்தான் நமக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிக் பாஸ் குறித்து பேசிய ரஷிதா :

‘பிக் பாஸ்’ நம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெரிய தளம். அதில் நம் திறமைகளைப் பார்த்து மக்கள் நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள். அதைப் பார்த்து இயக்குநர்கள் பட வாய்ப்பு வழங்குவார்கள். திறமையைப் பார்த்துதான் வாய்ப்பு வரும். ‘பிக் பாஸ்’க்கு போனாலே வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. இதுவரை என்னுடைய சீரியல்கள் மூலம்தான் எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

Advertisement