நிக்சன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஐஷு அப்பா-வைரலாகும் வீடியோ

0
748
- Advertisement -

நிக்சனுக்கு ஐஷு அப்பா கொடுத்திருக்கும் பதிலடி போஸ்ட் தான் தற்போது இணையத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு இருந்தது. அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இது பிக் பாஸ், சுமால் பாஸ் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு புது விதிமுறைகள் எல்லாம் போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டை எல்லாம் மிகப்பெரிய அளவில் விவாதமாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமற்ற நபர்களில் ஒருவர் நிக்சன். இவர் சில ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் இவர் சண்டைக்கு சென்றிருக்கிறார். குறிப்பாக, இவர் வினுஷாவை உருவ கேலி செய்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியிருந்தது. இது குறித்து கமலும் கண்டித்திருந்தார். அதற்கு பின் இவர் bully கேங்க்குடன் சேர்ந்து கொண்டு செய்த வேலைகள் எல்லாம் அளவே இல்லை.

நிக்சன் – ஐசு காதல்:

பிறகு அர்ச்சனா, விசித்திரா இருவரையும் நிக்சன் மோசமாக தாக்கி பேசி இருந்தார். இதனாலே இவர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். அதோடு இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது. இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது. இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. சொல்லப்போனால், ஐசுவின் செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு அவரின் பெற்றோர்கள் சேனல் இடம் அழுத்தம் கொடுத்தாகவும், அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

நிக்சன் பேட்டி:

அதே போல ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள்.
ஐசு இல்லனா பூர்ணிமா என்று கடைசி சில நாட்களாக பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்த செயல்கள் இவரது வெளியேற்றத்திற்கு அடித்தளம் போட்டது. பின் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் விக்ரம் மற்றும் ஜோவிகாவை சந்தித்து இருக்கிறார் நிக்சன். அதே போல வெளியேறிய பின் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நிக்சன். ஆனால், அவர் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நிக்சன் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

ஐஷு அப்பா போஸ்ட்:

அதில் அவர், பிரதீப் ஆண்டனி செய்தது தவறுதான் என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் நிக்சனை திட்டியும் அவருடைய பழைய வீடியோக்களை எல்லாம் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஐசுவின் அப்பா தன்னுடைய சோசியல் மீடியாவில், ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டேடா என்று பிரதீப் சொல்வது போல் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

Advertisement