அனிதாவை தொடர்ந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அபிராமி. பகிரங்கமாக சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட அபிராமி-இது தான் காரணம்

0
471
abhirami
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இது தமிழ் மொழியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

கடந்த வாரம் நிகழ்ச்சியில் நடந்தது:

பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா வெளியேறி இருக்கிறார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பின் திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் தீனா ஆகியோர் என்ட்ரி ஆகி இருந்தார்கள்.

நிகழ்ச்சியில் அபிராமி குறித்த சர்ச்சை:

பிறகு இந்த வாரத்திற்கான எழிமினேஷனில் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் சதீஸ் வெளியேறி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, முதல் நாளில் இருந்தே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதிலும் அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலன் என தெரிந்த உடன் அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போனது. நாட்கள் செல்ல செல்ல அபிராமி – நிரூப் இடையே பல கலவரங்கள் வெடித்தது.

-விளம்பரம்-

சிம்புவிடம் அபிராமி மன்னிப்பு கேட்க காரணம்:

மேலும், அபிராமி கடந்த வாரம் சிம்பு குறித்து அவமரியாதையாக பேசி இருக்கிறார் என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்நிலையில் அபிராமி சிம்புவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் அபிராமி கூறியிருப்பது, இன்னைக்கு நடந்த டாஸ்கில் ரேட்டிங் நடந்தது. அதில் நாங்கள் சில பாயிண்ட்ஸ் எடுத்து வைத்தோம். அதை எதிர்த்து என்ன சொல்வதென்று? புரியாமல் சனிக்கிழமை சிம்பு சார் சொன்னதை வைத்து அவர் இப்படி சொன்னார் ,அப்படி சொன்னார் என்று பேசுகிறார்கள். உண்மையாலுமே நான் சிம்பு சாரிடம் அவமரியாதையாக நடக்கவில்லை. அவரை பற்றி தவறாக பேசவில்லை.

சிம்பு குறித்து அனிதா சொன்னது:

அவருக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்ற எண்ணமும் எனக்கு கிடையாது. அவர் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன். இதை தவறாக புரிந்து கொண்டு இவர்கள் சொல்லுவது கஷ்டமாக இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு ஏதாவது அந்த மாதிரி தோன்றி இருந்தால் சிம்பு சார் இடமும், மக்களிடமும், ரசிகர்கள் இடமும் மன்னிப்பு கேட்கிறேன். நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன் என்று பேசி இருக்கிறார். இப்படி அபிராமி பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல் ஏற்கனவே அனிதா, சிம்பு குறித்து பிற போட்டியாளர்கள் இடம் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதேபோல் தற்போது அபிராமி, சிம்பு குறித்து பேசிய சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டிருக்கிறார்.

Advertisement