இரவு பார்ட்டி..!குடி போதையில் காரை ஒட்டி வந்து காவலர்களிடம் ரகளை செய்த காயத்ரி..!

0
1363
Gayathriraguram
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

-விளம்பரம்-

Gayathri

- Advertisement -

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீக் எண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமும் கலந்து கொண்டார். நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை கலர் சொகுசு கார் ஒன்று அடையாறு நோக்கி சாலையில் அசுர வேகத்தில் தாறுமாறாக வந்தது. அதை பார்த்த போலீசார் சொகுசு காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

அப்போது சொகுசு காரை ஓட்டி வந்தவர் காயத்ரி ரகுராம் என்பது தெரிந்தது. கார் கண்ணாடியை கீழே இறக்கியதும் மது வாடை வீசியது. உடனே போலீசார் ‘மேடம் கீழே இறங்குங்கள்’ என்று கூறினர். அப்போது அவர், ‘நான் இறங்க முடியாது, உங்களுக்கு என்ன வேண்டும். நான் யார் என்று உங்களுக்கு தெரியாதா. அப்புறம் ஏன் என்னை காரில் இருந்து கீழே இறங்குங்கள் என்று கூறுகிறீர்கள்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

-விளம்பரம்-

உடனே போலீசார் ‘மேடம் நீங்கள் போதையில் இருக்கிறீர்களா’ என்று கேட்டு, போதை பரிசோதனை கருவியில் மூச்சு காற்றை ஊதும்படி கூறினர். அதற்கு அவர் போலீசாரை திட்டியபடி போதை பரிசோதனை கருவியில் ஊதினார். அதில் அவர் மது குடித்திருப்பது உறுதியானது. உடனே போலீசார் அவரிடம் காரை விட்டு இறங்குங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் குடிக்கவில்லை நீங்கள் தான் குடித்துவிட்டு பணியில் இருக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு போதையில் இருந்த காயத்ரி ரகுராமை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து ரூ.2,500 அபராதத்திற்கான ரசீதை கொடுத்தனர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர், நீங்கள் கார் ஓட்ட வேண்டாம் என்று கூறி காவலரை காரை ஓட்டி சென்று வீட்டில் விட்டுவிட்டு வருமாறு உடன் அனுப்பினர். இந்த சம்பவத்தால் அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே நள்ளிரவு சிறிது

Advertisement