மரியாத குடுங்க – ஜூலிக்கு டோஸ் விட்ட பிக் பாஸ். வைரலாகும் வீடியோ இதோ

0
325
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 14 பேர் கலந்து கொண்டனர். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி 6 வாரங்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. அதோடு சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றவர் ஜூலி. அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் ஜூலி மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தார். இதனால் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நபராகவும், மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர் ஆகவும் ஜூலி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ்ஸில் ஜூலி செய்த வேலை:

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போயிருந்தார். ஆனால், ஜூலி தான் எடுத்த பெயர் மொத்தத்தையும் டேமேஜ் ஆகி விட்டு தான் வெளியே வந்தார் என்றே சொல்லலாம். இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பலரும் அவரை பயங்கரமாக திட்டி தீர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி:

அதோடு நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவரைப்பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் அதிகம் இருந்தது. இருந்தாலும் ஜூலி மனம் தளராமல் தைரியமாக பல மேடைகளில் கலந்துகொண்டு பேசியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். ஆரம்பத்தில் ஜூலி அமைதியாக இருந்தாலும் போகப்போக தன்னுடைய ஆட்டத்தை காண்பித்து வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே ஜூலியும், அபிராமியும் நல்ல நிகழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஜூலியை பிக் பாஸ் திட்டிய காரணம்:

அதிலும் ஜூலி இந்த வீட்டில் அதிகம் அபிராமி உடன் தான் இருக்கிறார். அதிலும் நிரூப் விஷயத்தில் ஜூலி அபிராமிக்கு சாதகமாக தான் பேசி இருக்கிறார். வழக்கம் போல் ஜூலி கேங் உருவாக்கி பிறரை கிண்டலாக பேசி வருகிறார். இந்நிலையில் ஜூலி உடைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஜூலி பிக் பாஸ்ஸை பார்த்து கிண்டலாக பேசியிருக்கிறார். இதனால் கோபமான பிக் பாஸ் ஜூலியை கண்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து இருக்கிறார். பின் ஜூலியிடம், வேடிக்கையாக பேசுவது வேறு, மரியாதை இல்லாமல் பேசுவது வேறு.

ஜூலையை விமர்சிக்கும் ரசிகர்கள்:

உங்களுக்கு இந்த வீட்டில் மரியாதை கொடுக்கிறார்கள். அதை நீங்கள் சரியாக செய்யுங்கள். நீங்களும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று பிக் பாஸ் அறிவுரை கூறுகிறார். இதனால் ஜூலி மன்னித்து விடுங்கள். நான் டாஸ்க் எல்லாம் சரியாக தான் செய்தேன் என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே பிக் பாஸ் ஜூலியை நீங்கள் கிளம்பலாம் என்று கூறியிருக்கிறார். இப்படி ஜூலி பிக்பாஸ் இடம் மன்னிப்பு கேட்டு பல்பு வாங்கிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கமன்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement