பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் சென்ராயன் வெளியேற்ற பட்டது தான் மக்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்து வருகிறது. இதுவரை எத்தனையோ போட்டியாளர்கள் வெளியேறிய போது கைதட்டி வரவேற்ற மக்கள் சென்ராயனின் எலிமினேஷன் அறிவிப்பை கொண்டாடமுடியாமல் அமைதியாக இருந்தனர்.
My best friend #Thalaivan #STR welcomes my #biggboss homie #sendrayan & wishes him the best ! welcome home #sendrayan pic.twitter.com/jC4RjkVmrK
— Mahat Raghavendra (@MahatOfficial) September 10, 2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சென்ராயனை நடிகர் சிம்பு சந்தித்து புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத்தை சந்தித்து அவரது கன்னத்தில் செல்லமாக அறைந்து அவரை வரவேற்ற வீடியோ ஒன்றை மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்ராயனை சிம்பு சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் மஹத். மேலும், இந்த சந்திப்பின் போது சென்ராயனுக்கு திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார் சிம்பு.
நடிகர் சென்ராயனும் சிம்புவும் துறை ரீதியாக நல்ல நண்பர்கள், சிம்பு நடித்த “சிலம்பாட்டம் ” படத்தில் சென்ராயன் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நட்பை மறக்காமல் நடிகர் சென்ராயனை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் சிம்பு.