அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸ் – எப்போன்னு தெரியுமா?

0
338
Simbu
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸ் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எட்டாவது வாரத்தை கடந்து உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
Bigg Boss Ultimate First Elimination | பிக் பாஸ் அல்டிமேட்

இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் பொறாமை தொடங்கி விட்டது. அதோடு இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் வெளியேறிய நிலையில் வனிதா தாமாகவே வெளியேறினார்.

இதையும் பாருங்க : குஷ்பூவின் தம்பியை பார்த்து இருக்கீங்களா ? இதுவரை வெளிவராத அறிய புகைப்படம் – அவரும் ஹீரோவா நடிச்சி இருக்கார்.

- Advertisement -

வைல்ட் கார்ட் எண்ட்ரி பற்றிய தகவல்:

ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந்து நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

simbu

சுரேஷ் தாத்தா வெளியேற காரணம்:

இதில் ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் அவர் இந்த வாரம் போக மாட்டார் என்று கூறப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் அனிதா வெளியேறி இருக்கிறார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த வாரம் நிகழ்ச்சியில் வெளியேறியவர்:

அவர் வெளியேறியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் தீனா ஆகியோர் என்ட்ரி ஆகி இருந்தார்கள். இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் வீடே கலகலப்பாக மாறி சிரிப்பு மழையை பொழிந்து வருகிறது. பிறகு இந்த வாரத்திற்கான எழிமினேஷன் நடந்தது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாலாஜி, ஜூலி, சுருதி, ரம்யா பாண்டியன், அபிராமி, சதீஷ் ஆகியோர் இடம் பிடித்திருந்தார்கள். இதில் இந்த வாரம் கே பி இதில் சதீஷ் தான் வெளியேறி இருக்கிறார். இவர் சென்ற வாரமே வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bigg Boss Ultimate Launch Promo | பிக் பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸ்:

ஆனால், இந்த வாரம் சதிஷ் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேறி இருக்கிறார். வழக்கம் போல் போட்டியாளர்கள் வீட்டில் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்த தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸ் குறித்த தகவல் தான். இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிவிக்கவில்லை.

Advertisement