உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டே மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில்தான் 15 வருஷங்களுக்கு மேல் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் இந்தி bigboss நிகழ்ச்சிக்கு பின்னர் தான் மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி பிக் பாஸ் OTT :
அந்த வகையில் கடந்த இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. Voot Ottயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் 13 பேர் மொத்தம் 42 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இது Voot Ottயில் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் Voot சந்தாதாரகர்கள் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம். அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். இந்நிலையில் தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் பிக் பாஸ் அல்டிமேட் OTT:
தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், ஏற்கனவே பிக் பாஸ்ஸில் 5 சீசனில் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் நேற்று கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார்.
24 மணி நேரம் கண்டு கழிக்கும் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப் படுவதாகவும் இதை ஹாட்ஸ்டார் ப்ளஸ்ஸில் பார்க்கலாம் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமலஹாசன் அவர்கள், சுவரைக் கொஞ்சம் அதிகமாக ஏத்தி கட்டு வருபவர்கள் அப்படி என்று கூறுகிறார். முதல் சீசனில் சுவர் ஏறி குதித்த பரணியை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. அதேபோல் பத்த வைப்பவர் இருக்கிறார். இந்த டைமும் பத்த வைக்க போகிறார் என்றும் கூறியிருந்தார். பத்த வைப்பவர் என்றாலே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்:
அது நம்ம வனிதா மட்டும் தான். இதனால் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பரணி, வனிதா இருவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவர்களை தொடர்ந்து அடுத்து யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி எப்போ ஒளிபரப்புகிறார்கள் என்பதும் தெரியவில்லை. தற்போது இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.