பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த தளபதி விஜய்…! வையாபுரியிடம் என்ன சொன்னார் தெரியுமா..?

0
259
vaiyapuri

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. பல கோடி ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இளைய தளபதி விஜய்யும் ஒரு ரசிகராக இருந்துள்ளார் என்று காமெடி நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகரான வையாபுரியும் கலந்து கொண்டிருந்தார். நடிகர் வையாபுரி, நடிகர் விஜய்யுடன் “லவ் டுடே, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும்,” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வையாபுரியிடம் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது பேசியுள்ள வையாபுரி, நான் விஜய்யுடன் படம் நடிக்காததை பார்த்து பலரும் உங்களுக்கும், விஜய்க்கும் எதாவது சண்டையா என எண்ணி வருகின்றனர்.

vijay

நான் சமீபத்தில் விஜய்யை, முருகதாஸ் படப்பிடிப்பின் போது சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம், நாம் இருவரும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று கேட்ட போது, கண்டிப்பாக பண்ணுவோம் என்று என்னிடம் கூறினார் விஜய். அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கிறது, பசங்க பார்க்கும் போது நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தேன் நன்றாக இருந்தது என்று விஜய் என்னிடம் கூறியிருந்தார் என்று நடிகர் வையாபுரி பேசியுள்ளார்.