ஆவலுடன் எதிர்பார்த்த KGF படத்தின் இரண்டாம் பாகம்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
667
Kgf-2

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். 

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. பிற மொழியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இதையும் படியுங்க : விஜய் சமீபத்தில் பார்த்த படம்.! பார்த்துட்டு என்ன சொனார்னு பாருங்க.! 

- Advertisement -

யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பகத்திற்கான பூஜை சமீபத்தில் துவங்கியுள்ளது. விஜயநகரத்தில் உள்ள கொண்டான்டரம் கோவிலில் நடிகர் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் இருவரும் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

Advertisement