என்னடா லிப் லாக்லாம் அடிக்கிறீங்க – இது பிக் பாஸா இல்ல வேற எதனாவா. வைரலாகும் வீடியோ.

0
13825
biggbosshindi

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்தியா முழுவதும் உள்ள பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வருடம் வருடம் ரசிகர்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும் பார்த்து வருகின்றனர்.

Image

அந்த வகையில் சமீபத்தில் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. கடந்த நான்கு சீசன்களை விட இந்த முறை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கின்றனர். மேலும், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒருவரிடத்தில் எழிமினேஷன் ப்ராஸ்ஸஸ் முறை நடந்து வருகின்றது. அதேபோல் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் அதிக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : உள்ளாட்சி தேர்தல், அரை சதத்திற்கு மேல் அடித்த விஜய் மக்கள் இயக்கம். (விஜய் அரசியலுக்கு செம அடித்தளம்)

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோகளை ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியான ஹிந்தி பிக் பாஸ் ப்ரோமோ சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு ஹிந்தி பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் Miesha Iyer, ieshan sehgal இருவரும் இணைந்து எல்லை மீறி ரொமான்ஸ் செய்து உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியை பிறர் பார்க்கிறார்கள் என்று கூட நினைக்காமல் எல்லை மீறி இவர்கள் இருவரும் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ரொமான்ஸ் இடம்பெற்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எப்படியெல்லாம் கூட நிகழ்ச்சியில் செய்வதா? தயவு செய்து இவர்களை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் பலரும் பலவிதமாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement