பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு திருமணம் செய்த டேனியல்.! வைரலாகும் புகைப்படம்!

0
429
daniel

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் டேனி வெளியேற்றப்பட்டார். எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கடந்த வார எலிமினேஷன் அறிவிப்பு வித்தியாசமாக நடைபெற்றது. பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே கடினமான போட்டியாளர் என்று பெயர் எடுத்த டேனி வெளியேறியதும் சக போட்டியாளர்கள் யாரும் எந்த ஒரு ஆரவாரமின்றியும் அவரை வழியனுப்பி வைத்தனர்.

daniel

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான டெனிஷாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போதைக்கு தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்துள்ள டேனி, திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Bigg boss daniel

danisha

danisha

டேனி கூறியது போலவே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷாவை கரம் பிடித்துள்ள செய்தி ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக அமைந்துள்ளது. விரைவில் டேனி கூறியது போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.