வாணி ராணி சீரியல் நடிகை நவ்யாவை தொடர்ந்து அவருடன் நடித்த இந்த நடிகருக்கும் கொரோனா உறுதியானது.

0
3258
navya

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது வாணி ராணி சீரியல் புகழ் நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நவ்யா. இவருக்கு தான் சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையும் பாருங்க : சுப்ரமணியபுறம் படத்தில் பிரமன் துளசியை கொன்றாரா இல்லையா ? அவரே சொன்ன பதில்.

- Advertisement -

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் நடிகை நவ்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனக்கு கொரோனா இருப்பது உண்மை தான். என்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், விரைவில் கொரனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒன்றும் அசிங்கப்படும் விஷயம் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்,விரைவில் குணமடைந்து உங்களை சந்திக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் ‘நா பேரு மீனாட்சி’ சீரியலில் இணைந்து  நடித்து வந்த, நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், எனக்கு கொரோனா இருப்பதாக வந்த செய்தி உண்மைதான். கடந்த 3 நாட்களாக என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடவுள் புண்ணியத்தில் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். மேலும், என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் தயவு செய்து ஒரு பரிசோதனையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement