பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று போட்டியாளர்கள் இவர்கள் தான்.! இந்த ஒருதர் செம.!

0
954
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான புரோமோ வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சியில் இன்று வெளியிட்டிருந்தது. கடந்த இரண்டு சீசனை போலவே இந்தச் சீசனை போலவே நடிகர் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று இந்த புரோமோ வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-

ப்ரோமோ வீடியோ வெளியான சில மணி நேரத்திற்கு உள்ளக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர் பற்றிய விவரம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த லிஸ்டில் பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கர், நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் விஜய் டிவி பிரபலம் ஆலியா மானஸா போன்றவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

இதையும் பாருங்க : வெளியானது பிக் பாஸ் சீசன் 3 யின் ப்ரோமோ வீடியோ.! கமல் லுக் செம.! 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். முதல் சீசனில் ஆர்த்தி, இரண்டாவது சீசனில் அனந்த் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதேபோல மூன்றாவது சீசனிலும் கண்டிப்பாக ஒரு விஜய் டிவி பிரபலம் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அது ஆலியா மானசா வாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த போட்டியாளர்களின் பெயர்களும் அதிகாரபூர்வமான ஒன்றே கிடையாது. எனவே, விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே போட்டியாளர்களை பற்றிய விவரம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement