விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகாலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று (ஜூன் 23) கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் பலருக்கும் பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக மாற்றங்களை விவரித்து கொண்டிருந்த கமல், கன்பெசன் ரூமிற்கு சென்றார். பின்னர் பிக் பாஸிடம் பேசிய கமல், முதல் போட்டியாளரை பாஸ் வீட்டில் இருந்தே வரவேற்பதாக கூறினார் கமல். பின்னர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் பிரபல செய்தி வாசிப்பாளராக பாத்திமா பாபு.
இதையும் பாருங்க : #வண்டுமுருகன்அஜித்.! அஜித்தை பங்கமாக கலாய்த்த மலையாள நடிகை.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.!
செய்தி வாசிப்பாளராக பாத்திமா பாபு பல செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் நேர்படையாக பேசும் ஒரு குணமுடையவர் என்பதும் பலரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தண்ணீரும், எரிவாயுவும் அளவாகவே அளிக்கபடும் என்று பிக் பாஸ், போட்டியாளர்களுக்கு அறிவித்தததும் போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். உடனே பாத்திமா பாபு, தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்பது ஒரு அவள நிலை, கைதட்டி வரவேற்கும் ஒரு விஷயம் இல்லை என்று அதிருப்தியாக கூறுகிறார்.
இதையடுத்து பேசும் சேரன், தண்ணீரை குறைவாக செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்ததைத்தான் வருகேற்றுகிறோம் என்று கூறுகிறார். இப்படியாக அந்த ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியில் பாத்திமாவிற்கும் சேரனுக்கும் எதாவது வாக்குவாதம் ஏற்படுமா என்று சந்தேகம் எழுகிறது.