வாரம் ஒரு தலைவர் டெய்லி ஒரு சண்டை.! பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ இதோ.!

0
832
Bigg-Boss-3
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 4 நாட்களே உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்று கிழமை (ஜூன் 23) இரவு 8 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

-விளம்பரம்-

கடந்த இரண்டு சீசனை போல இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 4 வது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் ஓகே ஓகே பட நடிகை ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதிபடுத்தபட்டுள்ளார். மற்ற போட்டியாளர்களை பற்றிய விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல், வாரம் ஒரு தலைவர், தினமும் ஒரு சண்டை, யார் எந்த கட்சி என்று சூசகமாக அரசியல் கலந்த வசனத்தை பேசியுள்ளார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தணிக்கை சான்று பெறப்படவில்லை என்று சுதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, பிக் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என்று பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

-விளம்பரம்-

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிதிட்டமிட்டபடி ஒளிபரப்பபடுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்ட ஒளிபரப்பப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement