பிக் பாஸ் கொண்டாட்டத்தில் சனம் பங்கேற்கவில்லையா ? அனிதா சமபத் பதில்.

0
11293
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது.

இதையும் பாருங்க : மீண்டும் 4மணி ஆரம்பித்துவிட்டது – ஷிவானியின் டாப் ஆங்கிள் போட்டோ ஷூட்டை கண்டு குஷியான ரசிகர்கள்.

- Advertisement -

அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் வென்றார் ஆரி. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து 10 நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அனிதா சம்பத் வெளியிட்டு இருந்தார். அதில், பெண் போட்டியாளர்களான அர்ச்சனா, சம்யுக்தா, ரேகா, நிஷா, ஷிவானி, ஆகியோர் இருக்கின்றனர். இதில் சனம் ஏன் இல்லை என்று கூறியுள்ள அனிதா, சனம் மிஸ்ஸிங் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டாங்க. கேப்பீங்கன்னு தெரியும் அதான் முதல்லே சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார். அதே போல ஏற்கனவே பிக் பாஸ் கொண்டாட்ட செட்டில் சனம் மற்றும் ஆரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனிதா வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement