மோடி பத்தி குற சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாத – அட்வைஸ் செய்த காயத்ரி ரகுராமை Block செய்த சித்தார்த். அதற்கு அவரின் பதிலை பாருங்க.

0
2254

மோடி குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த சித்தார்த்திற்கு அட்வைஸ் செய்ததால் காயத்ரி ரகுராமை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். இதற்கு நடிகை காயத்ரி ரகுராமும் பதில் கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

தற்போது நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்தார். இது அவருடைய வழக்கமான ஒன்று.ருப்பு பணம் விவகாரத்தில் இருந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரை மத்திய மற்றும் மாநில அரசு என எந்தத் தரப்பையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தார்.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடை, சுருக்கு போட்ட சட்டையில் மிடுக்கா போஸ் கொடுத்த நடிகை. (இவங்க யாரோட பேத்தி தெரியுமல

- Advertisement -

அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்தும் ட்வீட் செய்து இருந்தார் சித்தார்த். இப்படி ஒரு நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி செய்த டீவீட்டுக்கு தற்போது அளித்துள்ளார் சித்தார்த். மோடியின் அந்த டீவீட்டில், இந்தியாவிற்கு ஒரு வலுவான அரசு தேவை. மோடி ஒன்றும் கிடையாது. நான் மறுபடியும் சென்று டீ கடையை கூட போட்டுக்கொள்வேன். ஆனால், இதற்கு மேலும் நாடு கஷ்டப்படக் கூடாது. மோடியின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள சித்தார்த், இந்த மனிதர் சொல்லும் அணைத்து பாயிண்ட்ஸ்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களால் நம்ப முடியுதா ? என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து இப்படி சித்தாதார்த் மோடி பற்றி பதிவிட்டு வருவதால் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சித்தார்த்துக்கு வேண்டுகோள் ஒன்றையும் சில அறிவுரைகளையும் வழங்கி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், சித்தார்த் தொடர்ந்து மோடி பற்றியும் அரசின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனங்களை மட்டும் முன்வைக்கிறார். அதற்கு மாறாக கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே என்று பதிவிட்டு இருந்தார் காயத்ரி ரகுராம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் காயத்ரி ரகுராமை தனது ட்விட்டர் பக்கத்தில் பிளாக் செய்தார் சித்தார்த். இதனால் கொஞ்சம் நோஸ் கட் அடைந்த காயத்ரி, எளிமையான விமர்சனங்களைக் கையாள முடியாத நீங்கள் மோடி ஜியை முழுவதும் விமர்சிக்கிறீர்கள். பாய்ஸ் படத்தில் இருந்தே நான் உன் நடிப்புக்கு ரசிகை. நான் உன்னை என் நண்பனாக விரும்புகிறேன். எதுவும் மாறாது. நீங்கள் மற்றவர்களை விமர்சிக்கும்போது நீங்கள் விமர்சனத்தை ஏற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்., நான் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளேன். எனது ட்வீட்டுகள் தடைசெய்யப்பட்டு மறைக்கப்படுகின்றன. பின்தொடர்பவர்கள் எனது ட்வீட் எதையும் பார்க்க முடியாது என்று புகார் கூறுகிறார்கள், அவர்கள் தானாகவே பின்பற்றப்படவில்லை. எனது ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மாதங்களில் மாறவில்லை. ஏதோ நிச்சயமாக முடக்கப்பட்டுள்ளது!. என்ன நடக்கிறது என்று ட்விட்டர் இந்தியா என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பலரும் ‘நீங்கள் மோடி பற்றி பதிவிடுவதால் தான் இப்படி நடக்கிறது’ என்று கமன்ட் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement