மேடையில் வெடித்த விசித்ரா-தினேஷ் பஞ்சாயத்து, மாபூ மீது கடுப்பான கூல் சுரேஷ் – பிக் பாஸ் கொண்டாட்ட அப்டேட்

0
287
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 கொண்டாட்டம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்திருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். அர்ச்சனா வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா ஆகியோர் பிடித்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே ரசிகர்கள் எதிர்பார்ப்பது பிக் பாஸ் கொண்டாட்டம் தான்.

பிக் பாஸ் கொண்டாட்டம்:

வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே பிக் பாஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்தும் பிக் பாஸ் கொண்டாட்டத்தை காணவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இப்படி இருக்கும் இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் தான் சென்னை பூந்தமல்லியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்திற்கான சூட் நடைபெற்றிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சிக்கு வராதவர்கள் பட்டியல்:

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சில பேர் கிராண்ட் பினாலேக்கு வரவில்லை. குறிப்பாக, பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, அன்ன பாரதி போன்றோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பிக் பாஸ் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அன்ன பாரதி பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து இருக்கிறார். அதற்கு மாறாக பவா செல்லதுரை, பிரதீப் யுகேந்திரன், ஐசு ஆகியோர் தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும், இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்களை வைத்து விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.

விசித்ரா- தினேஷ் இடையே நடந்தது:

மாயா- பூர்ணிமா அதே பழைய உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் விளையாடி இருக்கிறார்கள். இதை பார்த்து கூல் சுரேஷ் கடுப்பாகி பேசி இருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் மதுரை முத்து, ராமரும் கலந்து இருக்கிறார்கள். அதோடு நிகழ்ச்சியினுடைய ஹைலைட்டை விசித்ரா- தினேஷ் எபிசோட் தான். நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்ல் விசித்ரா, தினேஷிடம் சாரி என்று சொன்னவுடன் தினேஷம் பதிலுக்கு சிரித்துக்கொண்டே அவருக்கு பதில் கொடுத்து விட்டார். ஒரு வழியாக விசித்திரா- தினேஷ் சர்ச்சை இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் முடிவு வந்திருக்கிறது. இதை இன்னும் சில தினங்களில் எபிசோடாக விஜய் டிவியில் பார்க்கலாம்.

Advertisement