அண்ணாமலை- அன்புமணி ராமதாஸ் சேர்ந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
மேலும், திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். பின் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இது தொடர்பாக சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்றிருக்கிறார். அங்கு சரத்குமார் உடன் சேர்ந்து அண்ணாமலை ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். அதற்கு பிறகு சரத்குமார், பாஜகவுடன் சமத்துவக் கட்சி இணைந்தது முடிவு கிடையாது.
கட்சி கூட்டணி:
மக்கள் பணிக்காக தொடக்கம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் தான் இந்த முடிவு என்று கூறி இருக்கிறார். இப்படி அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்தும், தீவிரமாக ஆலோசனைகளை நடத்தியும் வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பாஜகவுடன் அன்புமணி ராமதாஸ் கட்சி கூட்டணி வைத்திருக்கிறது. இது தொடர்பாக அண்ணாமலை- அன்புமணி ராமதாஸ் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இயக்குனர் மோகன்ஜி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
MBBS +IPS 🔥💐💥 pic.twitter.com/Jdo5Ou3Xjw
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 19, 2024
அண்ணாமலை- அன்புமணி ராமதாஸ் கூட்டணி:
ஏற்கனவே கடந்த மாதம் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றிருந்தது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது பாஜகவுடன் சில கட்சிகள் கூட்டணி வைத்து கட்சியை வலுவாகி வருகிறார்கள். இதனால் நடக்க இருக்கும் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற பாஜக பயங்கரமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் திமுக, அதிமுகவும் கட்சி கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
மோகன் ஜி குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் மோகன் ஜி ஒருவர். இவர் பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் ஜி திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து இருந்தது.
இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதையாக இருந்தது. பின் இவர் செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்து இருந்தார் இயக்குனர் மோகன் ஜி. இப்படி இவர் இயக்கிய எல்லா படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.